Home உலகம் உலகக் கிண்ணக் காற்பந்து : அர்ஜெண்டினா கிண்ணத்தை வெற்றி கொண்டது

உலகக் கிண்ணக் காற்பந்து : அர்ஜெண்டினா கிண்ணத்தை வெற்றி கொண்டது

526
0
SHARE
Ad

டோஹா : நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கான இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா, பிரான்ஸ் இரண்டுமே 3-3 கோல்கள் எண்ணிக்கையில் சரிசமமாக ஆட்டத்தை முடித்துக் கொண்டன. 90 நிமிடங்களுக்கான ஆட்டத்தில் இரு நாடுகளின் குழுக்களுமே தலா 2 கோல்கள் அடித்து ஆட்டத்தை நிறைவு செய்தன.

அதைத் தொடர்ந்து ஒதுக்கப்பட்ட கூடுதல் அரை மணி நேரத்தில் இரு குழுக்களுமே தலா ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 3-3 என்ற எண்ணிக்கையில் நிறைவு செய்தன.

வெற்றியாளரை பினால்டி கோல்கள் மூலம் நிர்ணயிக்க முடிவெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அர்ஜெண்டினா 4-2 பினால்டி கோல்கள் எண்ணிக்கையில் பிரான்சைத் தோற்கடித்துக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.