Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : ‘வீரா’- முதல் உள்ளூர் தமிழ் விளையாட்டுத் தொடர்

ஆஸ்ட்ரோ : ‘வீரா’- முதல் உள்ளூர் தமிழ் விளையாட்டுத் தொடர்

459
0
SHARE
Ad

முதல் உள்ளூர் தமிழ் விளையாட்டுத் தொடர் ‘வீரா’ டிசம்பர் 19 ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது. ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் கண்டுக் களியுங்கள்

கோலாலம்பூர் – டிசம்பர் 19, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் வீரா எனும் முதல் உள்ளூர் தமிழ் விளையாட்டுத் தொடரை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.

குறிப்பிடத்தக்க உள்ளூர் திரைப்பட இயக்குநர், எம்.எஸ் பிரேம் நாத் இயக்கிய, வீரா தொடரில் தீபன் கோவிந்தசாமி, தாஷா கிருஷ்ணக்குமார், ஷர்மேந்திரன் ரகோநாதன், ஷாமினி ஷ்ரதா மற்றும் பலத் திறமையான உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர்.

ஆஸ்ட்ரோவின் இந்திய அலைவரிசை வணிகப் பிரிவு உதவித் துணைத் தலைவர் (ஆஸ்ட்ரோ விண்மீன்), மகேஸ்வரன் பாலகிருஷ்ணன் கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்க, உள்ளூர் தமிழ் பொழுதுபோக்கின் புதிய வகையை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இரசிகர்களுக்கு உண்மையான தற்காப்புக் கலைப் போட்டி அரங்கில் இருக்கும் உணர்வை வழங்கும் நோக்கமோடு உண்மையானத் தற்காப்புக் கலை வீரர்களைத் தாங்கி மலர்வதால் இந்தத் தொடர் மிகவும் தனித்துவமானது. பல்வேறுப் பின்னணியைச் சார்ந்த உள்ளூர் திறமையாளர்கள் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்கவும் பல உள்ளூர் தயாரிப்புக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”

#TamilSchoolmychoice

வீரா தொடரின் இயக்குநர், எம்.எஸ் பிரேம் நாத் கூறுகையில், “சில ஆண்டுகளுக்கு முன்பு 1950-களில் ஈப்போவைச் சேர்ந்த உள்ளூர் குத்துச்சண்டை வீரருடனானச் சந்திப்பே வீரா தொடரை இயக்குவதற்கான முக்கிய உத்வேகமாக அமைந்தது. இருப்பினும் இந்தத் தொடரின் கதைக்களம் கற்பனை அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட இக்கதை பின்பு ஒரு தொடராக உருவெடுத்தது. கலப்புத் தற்காப்புக் கலைகளை (எம்எம்ஏ) மையமாகக் கொண்ட, மற்றும் குடும்பம், நட்பு, காதல் மற்றும் பலவற்றைச் சித்தரிக்கும் முதல் உள்ளூர் தமிழ் விளையாட்டுத் தொடர், வீரா. சண்டைக் காட்சிகளை மிகவும் யதார்த்தமான முறையில் இரசிகர்களுக்கு வழங்கும் நோக்கைக் கொண்டதால் முன்னணி நடிகர்களானத் தீபன் கோவிந்தசாமி மற்றும் ஷர்மேந்திரன் ரகோநாதன் உட்பட இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள அனைத்து விளையாட்டு வீரர்களும் உண்மையான விளையாட்டு வீரர்களாவர். இந்தத் தொடரில் சர்வதேச நடிகரானத் மதியழகனை நடிக்க வைக்கும் பாக்கியம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

22-அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர், முன்னாள் குத்துச்சண்டைச் சாம்பியனானத் தென்னவனிடம் பயிற்சிப் பெற்றத் திறமையானத் தற்காப்புக் கலைஞரான வீராவைச் சித்தரிக்கிறது. கலப்புத் தற்காப்புக் கலைகள் (எம்எம்ஏ) சாம்பியன்ஷிப்பில் தனது உடன்பிறந்தச் சகோதரரைப் போட்டியாளராக எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு அவர் தள்ளப்படுகிறார். வீரா முழு மனதுடன் தன் சகோதரனுடன் போட்டியிட்டுச் சாம்பியன்ஷிப்பை வெல்கிறாரா அல்லது தனது சகோதரன் சாம்பியனாக முடிசூடத் தனது வெற்றியை விட்டுக் கொடுக்கிறாரா என்பதே கதையின் முக்கியச் சாரம்சமாகும்.

வீரா தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்குத் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டுக் களியுங்கள் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள். மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.