Home இந்தியா இராஜாஜியின் 50-வது நினைவு நாள் – ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டார்

இராஜாஜியின் 50-வது நினைவு நாள் – ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டார்

440
0
SHARE
Ad

சென்னை : தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், மூதறிஞர் எனப் போற்றப்படுபவருமான இராஜாஜியின் 50-வது நினைவு நாளை முன்னிட்டு நடத்தப்படும் புகைப்படக் கண்காட்சியில் ஸ்டாலின் கலந்து கொண்டு பார்வையிட்டார்.

“விடுதலைப் போராட்டம், மொழிப் போராட்டம், ஆட்சி நிர்வாகம், இலக்கியம் எனப் பல தளங்களிலும் பங்களித்ததோடு, அரசியல் சார்புகளைக் கடந்து அனைவரோடும் நட்புறவைப் பேணியவர் மூதறிஞர் இராஜாஜி அவர்கள். அவரது வரலாற்றின் வழியே தமிழ்நாட்டு அரசியலின் போக்கையும் திசைமாற்றத்தையும் அறிந்துகொள்ளலாம்” என தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

“விடுதலைப் போராட்டத்தில் இராஜாஜி அவர்களின் பங்களிப்புக்காக இந்திய அரசு வழங்கிய தாமிரப் பட்டயத்தை நேரில் சென்று வழங்கியும், அவருக்கு கிண்டியில் நினைவாலயம் அமைத்தும் அவரைப் போற்றினார் முத்தமிழறிஞர் கலைஞர். தற்போது, இராஜாஜி அவர்களின் 50-ஆவது நினைவு ஆண்டையொட்டி அரசு விழா எடுத்தும், இன்றைய தலைமுறையினரும் அவரது வரலாற்றையும் பங்களிப்புகளையும் அறிந்துகொள்ளும் வகையில் Anna Centenary Library-யில் புகைப்படக் கண்காட்சி அமைத்தும் முத்தமிழறிஞரின் வழியில் மூதறிஞருக்கு மரியாதை செய்துள்ளோம்!” எனவும் ஸ்டாலின் தன் பதிவில் குறிப்பிட்டார்.