Home இந்தியா தாயாரின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றி விட்டு உடனே பணிக்குத் திரும்பிய மோடி

தாயாரின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றி விட்டு உடனே பணிக்குத் திரும்பிய மோடி

481
0
SHARE
Ad

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் மரணமடைந்ததைத் தொடர்ந்து, நேரில் வந்த அந்த இறுதிச் சடங்குகளில் மோடி கலந்து கொண்டார். தாயாரின் நல்லுடலைத் தூக்கிக் கொண்டு அவர் சென்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கெல்லாம் மோடி தன் தாயாரின் நல்லுடலைத் தகனம் செய்துவிட்டு உடனே 11.00 மணிக்கெல்லாம் அரசுப் பணிகளில் கலந்து கொள்ள திரும்பி விட்டார் மோடி.

அவருக்கு உள்நாட்டுத் தலைவர்களிடம் இருந்தும், வெளிநாட்டுத் தலைவர்களிடம் இருந்து அனுதாபச் செய்திகள் குவிந்தன.