Home கலை உலகம் நீண்ட இடைவெளிக்குபின் ரஜினி-ஸ்ரீதேவி சந்திப்பு

நீண்ட இடைவெளிக்குபின் ரஜினி-ஸ்ரீதேவி சந்திப்பு

843
0
SHARE
Ad

rajinikanth-sridevi-sliderசென்னை, ஏப்ரல் 25- நடிகை ஸ்ரீதேவி இரு தினங்களுக்கு முன் சென்னை வந்தார்.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

பின்னர் மும்பைக்கு புறப்படும் முன் தனக்கு நெருக்கமானவர்களுக்கு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்தார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நடந்தது. இதில் பழை நடிகைகள் லதா, குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ் போன்றோர் பங்கேற்றனர்.

#TamilSchoolmychoice

விருந்து நடந்து கொண்டு இருந்தபோது ரஜினிகாந்த் திடீரென வந்தார். அவரை யாரும் எதிர்பார்க்கவில்லை.

ரஜினி விருந்துக்கு வந்தது ஸ்ரீதேவிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கணவர் போனிகபூருடன் இணைந்து ரஜினியை வரவேற்றார்.

ஒரு மணி நேரத்துக்கு மேல் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது பழைய படங்களில் இணைந்து நடித்த படங்கள் பற்றி ஒருவருக்கொருவர் பேசி 10 வருட நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவர் இடையே இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதுகுறித்து விருந்தில் பங்கேற்ற பூர்ணிமா பாக்யராஜ் கூறும்போது, ரஜினிக்கு தன்னுடன் 1980 களில் நடித்த நடிகைகளை மிகவும் பிடிக்கும்.

ஒவ்வொரு வருடமும் 80களில் நடித்த நடிகர்-நடிகைகளை சந்தித்து பேசும் நிகழ்ச்சியில் அவரும் கலந்து கொள்வது உண்டு. அதுபோல் இந்த விருந்துக்கும் வந்துள்ளார் என்றார்.