Home உலகம் பூமியின் வரலாற்றில் அதிக வெப்பமானது இந்த ஜூலை மாதம்தான்

பூமியின் வரலாற்றில் அதிக வெப்பமானது இந்த ஜூலை மாதம்தான்

463
0
SHARE
Ad

வாஷிங்டன் : சுட்டால்தான் சூரியன் என்பார்கள். அதற்கேற்ப அண்மைய நாட்களில் அதிகமான வெயில் அடிக்கிறது, அதிகமான வெப்பம் உணர முடிகிறது என புலம்பி வந்தவர்களுக்கு …நீங்கள் சொன்னதெல்லாம் உண்மைதான் எனக் கூறியிருக்கிறார்கள் அறிவியலாளர்கள்.

பூமியின் வரலாற்றில் குறிப்பாக கடந்த 120 ஆயிரம் ஆண்டுகளில் மிக அதிகமான வெப்ப சூழல் நிலவியது 2023 ஜூலை மாதத்தில்தான் என்பதை ஆராய்ச்சிபூர்வமாக கண்டுபிடித்திருக்கிறார்கள் ஐரோப்பிய – அமெரிக்க அறிவியலாளர்கள்.

கடந்த 3 வாரங்களாக நிலவியது உண்மையிலேயே மக்கள் இதுவரை அனுபவித்திராத வெப்ப சூழல் என்பது உறுதியாகியுள்ளது.