Home Featured தமிழ் நாடு நாளை சூரிய கிரகணம்! சென்னையில் 26 நிமிடம் பார்க்க முடியும்!

நாளை சூரிய கிரகணம்! சென்னையில் 26 நிமிடம் பார்க்க முடியும்!

732
0
SHARE
Ad

eclipse-effectசென்னை – பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படும். அமாவாசை தினத்தன்று தான் சூரிய கிரகணம் நிகழும். இதனால் சூரியன் முழுவதுமாகவோ அல்லது பகுதியோ மறைக்கப்படும்.

பொதுவாக ஓராண்டில் 2 முதல் ஐந்து சூரிய கிரகணங்கள் வரை நடப்பதுண்டு. சில ஆண்டுகளில் சூரிய கிரகணம் ஏற்படாமலும் போகலாம். இந்தியாவில் முழு சூரிய கிரகணம் கடந்த 2010–ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15–ஆம் தேதி ஏற்பட்டது.

நடப்பாண்டில் 2 சூரிய கிரகணங்கள் ஏற்பட உள்ளது. அதன் முதல் சூரிய கிரகணம் நாளை (புதன்கிழமை) நிகழ்கிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.49 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்குகிறது. இந்தோனேசியா மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் இந்த சூரிய கிரகணம் 100 சதவீதம் தெரியும்.

#TamilSchoolmychoice

இந்தியாவின் பெரும் பாலான பகுதிகளில் பாதி சூரிய கிரகணம்தான் தெரியும். இந்தியாவின் மேற்கு, வடமேற்கு பகுதிகளில் இதை காண இயலாது. சென்னையில் நாளை காலை 6.20 மணிக்கு சூரியன் உதயமாகிறது.

6.22 மணி முதல் 6.48 மணி வரை 26 நிமிடங்கள் சென்னையில் சூரிய கிரகணத்தை பார்க்கலாம். விசாகப்பட்டினத்தில் 28 சதவீதம், திரிபுராவில் 15.1 சதவீதம், அசாமில் 11 சதவீதம், கொல்கத்தாவில் 18 சதவீதம் புவனேசுவரத்தில் 24 சதவீதம், பாட்னாவில் 12 சதவீதம், போர்ட்பிளேயரில் 49 சதவீதம் சூரிய கிரகணம் தெரியும்.