Home Featured நாடு தேர்தலுக்கு முன்பே பிரதமரை வெளியேற்றுவது புதிதல்ல – மொகிதின் கருத்து!

தேர்தலுக்கு முன்பே பிரதமரை வெளியேற்றுவது புதிதல்ல – மொகிதின் கருத்து!

563
0
SHARE
Ad

muhyiddin-yassin1கோலாலம்பூர் – ‘மக்கள் பிரகடனத்தை’ தற்காத்துப் பேசியுள்ள முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் யாசின், இதே முறையில் இதற்கு முன்பு மூன்று பிரதமர்கள் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “தேர்தல் வரை காத்திருக்காமல் பிரதமரை பதவியிலிருந்து வெளியேறுமாறு கூறுவதும், ஆட்சியில் இருந்து அரசாங்கத்தை மாற்றுவதும் ஒன்றும் புதிய விசயமல்ல. இதற்கு முன்பு துங்கு அப்துல் ரஹ்மான், ஹுசைன் ஆன் மற்றும் அப்துல்லா அகமட் படாவி ஆகியோரின் தலைமைத்துவத்தின் போது, இவ்வாறு நடந்து அவர்கள் நஜிப்பிற்கு வழிவிட்டுள்ளார்கள்”

“இந்தச் சூழ்நிலைகளையெல்லாம் கடந்தும் கூட, தேசிய முன்னணி அரசாங்கம் பாதிப்படையாது” என்றும் மொகிதின் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், இதற்கு முன்பு பிரதமர்களை வெளியேற்றியதற்கு அரசியல் காரணங்கள் மட்டுமே இருந்தது என்று கூறியுள்ள மொகிதின், ஊழல், நடத்தை மற்றும் நேர்மையில்  சந்தேகம் போன்றவையால் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.