Home Featured தமிழ் நாடு தந்தையின் 16-ஆம் நாள் ஈமச்சடங்கில் பங்கேற்க நளினிக்கு ஒரு நாள் அனுமதி!

தந்தையின் 16-ஆம் நாள் ஈமச்சடங்கில் பங்கேற்க நளினிக்கு ஒரு நாள் அனுமதி!

676
0
SHARE
Ad

nalini84-600சென்னை – ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி தமது தந்தையின் 16-ஆம் நாள் ஈமச்சடங்கில் பங்கேற்கும் வகையில் ஒரு நாள் அனுமதி (பரோல்) விடுப்பில் செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி (பரோலில்) வெளிவருவதற்காக மனுத்தாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி அவரது தந்தை மரணம் அடைந்ததற்காக 24-ஆம் தேதி 1 நாள் வெளிவந்து இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் அவரது தந்தையின் 16-ஆம் நாள் ஈமச்சடங்கில் பங்கேற்க 3 நாள் அனுமதிக் கேட்டு கடந்த 2-காம் தேதி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

#TamilSchoolmychoice

இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அவசரத்திற்கு மட்டுமே வெளிவர முடியும். இதுபோன்ற விஷயங்களுக்கு வெளிவர முடியாது என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இருந்தாலும் தந்தையின் இறுதி காரியத்திற்கு கண்டிப்பாக மகள் கலந்து கொள்ள வேண்டுமா? என நீதிபதி மாலா கேள்வி எழுப்பினார். இதனையடுத்து இன்று மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 வரை ஒருநாள் பரோலில் அவர்களை வெளியிட சிறத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.