Home கலை உலகம் ஆஸ்ட்ரோ ‘புரோஜெக்ட் கர்மா’ : விண்மீன் அலைவரிசையில் முதல் ஒளிபரப்பு

ஆஸ்ட்ரோ ‘புரோஜெக்ட் கர்மா’ : விண்மீன் அலைவரிசையில் முதல் ஒளிபரப்பு

421
0
SHARE
Ad

ஜூலை 31 ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)- இல் முதல் ஒளிபரப்புக் காணும் ‘புரோஜெக்ட் கர்மா’ என்ற உள்ளூர் தமிழ் நாடகக் கற்பனைத் தொடரைக் கண்டு மகிழுங்கள்

கோலாலம்பூர்– விண்மீனின் பிரத்தியேகத் தொடரான புரோஜெக்ட் கர்மா என்ற உள்ளூர் தமிழ் நாடகக் கற்பனைத் தொடரின் முதல் ஒளிபரப்பை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். உள்ளூர் திரைப்பட இயக்குநர் மிட்சல் ஆர் சந்திரன் இயக்கிய புரோஜெக்ட் கர்மா ஜூலை 31, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்பு காணும்.

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “எங்கள் புதிய ஆஸ்ட்ரோ முன்மொழிவை உறுதிப்படுத்தும் நோக்கில் உள்ளூர் உள்ளடக்கத் தயாரிப்பில் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்வதால், பலதரப்பட்ட உள்நாட்டுத் திறமையாளர்கள் மற்றும் தயாரிப்புக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் முழுக் குடும்பமும் கண்டு மகிழப் பிரீமியம் மற்றும் உயர்தரப் பொழுதுபோக்கை வழங்க இது வழிவகுக்கிறது. பசங்க மற்றும் ஜீயும் நீயும் தொடர்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த விண்மீனின் பிரத்தியேகத் தொடரும் இயக்குநரின் முதல் தொடருமான புரோஜெக்ட் கர்மா எனும் தனித்துவமானக் கதைக்களத்துடன் உருவாக்கப்பட்ட இந்த புதிய நாடகக் கற்பனைத் தொடரை எங்கள் வாடிக்கையாளர்கள் இரசிப்பார்கள் என்று நம்புகிறோம்” எனக் கூறினார்.

புரோஜெக்ட் கர்மா தொடரில் பர்வீன் நாயர், மார்ட்டின் ஆர். சந்திரன், ரூபினி கிருஷ்ணன், சாரா பாஸ்கின், புஷ்பா நாராயணன் போன்ற பிரபலமான மற்றும் வளர்ந்து வரும் உள்ளூர் திறமையாளர்கள் நடித்துள்ளனர். மேலும், பர்வீன் நாயர் மற்றும் மார்ட்டின் ஆர். சந்திரன் ஆகிய இருவரும் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடித்த முதல் தொடராகும். தான் அரிதான நோயால் பாதிக்கப்பட்டதால் அந்நோய்க்கானச் சிகிச்சைக்கு ஈடாக அந்நியர்களின் வாழ்க்கையில் நேர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்தும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட அருள் தாஸ் எனும் ஒரு வழக்கறிஞரை இந்த 16-அத்தியாயத் தொடர் சித்திரிக்கிறது. நோயைக் கண்டறிந்தவுடன் வாழ்க்கையின் மீது நம்பிக்கையை இழக்கும் அவர் திரு. கே என்ற மனித உருவிலான ‘கர்மாவைச்’ சந்திக்கிறார். அருள் தாஸ் சேகரித்தக் ‘கெட்ட கர்மா’ மட்டுமே அவரின் நோய்க்கு முதன்மைக் காரணம் என்று தெரிவித்த திரு. கே. நோய்க்கானத் தீர்வையும் வழங்குகிறார். அருள் தாஸ் அந்நியர்களின் வாழ்க்கையில் நேர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களின் ‘கர்ம அளவுகளைச்’ சமநிலைப்படுத்த வேண்டும் என்பதே அவரின் நோய்க்கானத் தீர்வாகும் – திரு. கே வழங்கியத் தீர்வை அருள் தாஸ் பின்பற்றுகிறாரா இல்லையா என்பதே கதையின் முக்கியச் சாரம்சமாகும்.

#TamilSchoolmychoice

புரோஜெக்ட் கர்மா தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டு களியுங்கள் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள். மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.