Home கலை உலகம் ‘பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2’- நேர்முகத் தேர்வுக்கு மலேசியர்கள் அழைக்கப்படுகின்றனர்

‘பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2’- நேர்முகத் தேர்வுக்கு மலேசியர்கள் அழைக்கப்படுகின்றனர்

352
0
SHARE
Ad

செப்டம்பர் 10 வரை நடைபெறும்
‘பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2’-இன் நேர்முகத்தேர்வில் பங்கேற்க மலேசியர்கள் அழைக்கப்படுகின்றனர்

கோலாலம்பூர் – 18 முதல் 40 வயதிற்குட்பட்ட ஆர்வமுள்ள மலேசியப் பாடகர்கள்  50,000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெற ஆஸ்ட்ரோவின் உள்ளூர் பாடல் திறன் போட்டியான பிக் ஸ்டேஜ் தமிழ்-இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீசன் 2-இல் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்.

தீபகற்ப மலேசியா முழுவதும் நான்கு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்முகத்தேர்வுகள் நடைபெறும்:

25 & 26 ஆகஸ்டு: தி லைட் ஹோட்டல், பினாங்கு
27 & 28 ஆகஸ்டு: ஹோட்டல் எக்செல்சியர், ஈப்போ
2 & 3 செப்டம்பர்: ஆஸ்ட்ரோ, புக்கிட் ஜாலீல், கோலாலம்பூர்
9 & 10 செப்டம்பர்: கிராண்ட் பரகான் ஹோட்டல், ஜோகூர் பாரு

#TamilSchoolmychoice

உள்ளூர் திறமையாளர்கள் தங்களின் பாடும் திறனை வெளிப்படுத்த வாய்ப்புகளை வழங்குவதோடு புகழ்பெற்ற இந்தியத் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களுக்கு பாராட்டும் மரியாதையும் தெரிவிப்பதை பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2 நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, நேர்முகத்தேர்வின் போது, ​​பங்கேற்பாளர்கள் இந்தியத் திரைப்படங்களின் பாடல்களைப் பாட வேண்டும்.

23 ஆகஸ்ட் 2023-ஆம் தேதிக்கு முன்பாக ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் முன்கூட்டியே பதிந்து கொண்ட போட்டியாளர்கள் மட்டுமே இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள முடியும்.

நேர்முகத்தேர்வைத் தொடர்ந்து, 24 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வெற்றியாளர்கள் மற்றும் இறுதிச் சுற்றுப் போட்டியாளர்கள் வீட்டிற்குத் தட்டிச் செல்லும் ரொக்கப் பரிசுகள் பின்வருமாறு:

முதல் நிலை வெற்றியாளர்: 50,000 ரிங்கிட்
இரண்டாம் நிலை வெற்றியாளர்: 25,000 ரிங்கிட்
முன்றாம் நிலை வெற்றியாளர்: 10,000 ரிங்கிட்
மிகவும் பிரபலமான விருது வெற்றியாளர்: 10,000 ரிங்கிட்
2 ஆறுதல் பரிசுகள் வெற்றியாளர்கள்: ஒவ்வொருவருக்கும் தலா 5,000 ரிங்கிட்
2 இறுதிச் சுற்றின் முதலாம் சுற்று ஆறுதல் பரிசுகள் வெற்றியாளர்கள்: ஒவ்வொருவருக்கும் தலா 3,000 ரிங்கிட்

மேல் விவரங்களுக்கு, ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.