Home இந்தியா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குரு பங்காரு அடிகளார் காலமானார்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குரு பங்காரு அடிகளார் காலமானார்

441
0
SHARE
Ad

சென்னை : தமிழ் நாட்டின் மிகப் பிரபலமான அம்மன் ஆலயங்களில் ஒன்று மேல்மருவத்தூர் ஆலயமாகும். இங்கு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அதன் குருவாக இருந்து வந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிற ஆடைகள் அணிந்ததால் அவரின் பக்தர்கள் கொண்ட இயக்கம் செவ்வாடை இயக்கம் என அழைக்கப்பட்டது. மலேசியாவிலும் அவர் பெயரிலான பக்தி இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடம் ஒன்றை உருவாக்கி புகழ் பெற்றவர் பங்காரு அடிகளார். அவருக்கு வயது 82.

#TamilSchoolmychoice

மாரடைப்பு காரணமாக அவர் காலமானார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.