Home Video ஜிகர்தண்டா 2 டபுள் எக்ஸ்: எஸ்.ஜே.சூர்யா – லாரன்ஸ் ராகவா தீபாவளி அதிரடி

ஜிகர்தண்டா 2 டபுள் எக்ஸ்: எஸ்.ஜே.சூர்யா – லாரன்ஸ் ராகவா தீபாவளி அதிரடி

770
0
SHARE
Ad

சென்னை : மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் விஜய்யின் லியோ திரைப்படம் நாளை வியாழக்கிழமை (அக்டோபர் 19) மலேசியாவிலும், உலகமெங்கிலும் திரையீடு காண்கிறது. சரி! அதை அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் எது?

சந்தேகமில்லாமல் ‘ஜிகர்தண்டா 2 டபுள் எக்ஸ்’ திரைப்படம்தான் அது! அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற மார்க் அந்தோணி படத்தில் விஷாலுடன் இணைந்து கலக்கிய எஸ்.ஜே.சூர்யா இந்தப் படத்தில் ராகவா லாரன்சுடன் இணைந்து கலக்குகிறார்.

எதிர்வரும் தீபாவளிக்கு இந்தப் படம் திரையீடு காணவிருக்கிறது.

#TamilSchoolmychoice

யாருடன் இணைந்து நடித்தாலும் தன் கதாபாத்திரத்தை மெருகேற்றி தன் நடிப்பை யாரும் எதிர்பாராத இன்னொரு வித்தியாச கோணத்திற்கு கொண்டு செல்வதை எஸ்.ஜே.சூர்யா தொடர்ச்சியாக வெற்றிகரமாக செய்து வருகிறார்.

இளம் இயக்குநரும் 2014-இல் வெளிவந்த ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகத்தை இயக்கியவருமான கார்த்திக் சுப்புராஜ் இந்த இரண்டாவது பாகத்தையும் இயக்கியுள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.

ஜிகர்தண்டா 2 டபுள் எக்ஸ் படத்தின் முன்னோட்டம் யூடியூப் தளத்தில் 14.3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. அந்த முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: