Home நாடு பினாங்கு ஜசெக : துணை முதலமைச்சர் ஜக்டீப் சிங் டியோ துணைத் தலைவராக நியமனம்

பினாங்கு ஜசெக : துணை முதலமைச்சர் ஜக்டீப் சிங் டியோ துணைத் தலைவராக நியமனம்

436
0
SHARE
Ad
ஜக்டீப் சிங் டியோ

ஜார்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தின் 2-வது துணை முதலமைச்சர் ஜக்டீப் சிங் டியோ பினாங்கு ஜசெகவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் அந்தப் பதவியை முன்னாள் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி வகித்து வந்தார். அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜசெக கட்சியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அந்தப் பதவி காலியானது.

இதுவரையில் பினாங்கு ஜசெகவின் உதவித் தலைவராக ஜக்டீப் சிங் டியோ பதவி வகித்து வந்தார். அவருக்கு பதிலாக புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டீவன் சிம் துணை நிதியமைச்சருமாவார்.