Home கலை உலகம் காஞ்சனா 3: பாடல் ஒன்றுக்கு 1,400 நடன கலைஞர்கள்!

காஞ்சனா 3: பாடல் ஒன்றுக்கு 1,400 நடன கலைஞர்கள்!

1441
0
SHARE
Ad

சென்னை: வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி வெளிவர இருக்கும் காஞ்சனா 3 படத்தினை சன் தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்து உள்ளத். அவ்வகையில், சமீபத்தில் சன்டிவியில், இத்திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இத்திரைப்படத்தினை நடிகரும் நடன ஆசிரியருமான ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ளார். முனி படத்தின் 4-வது தொடராக இப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, சத்யராஜ், கோவை சரளா, துவான் சிங், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற டூ பா டூ பாடல் மிக பிரண்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாக ராகவா தெரிவித்துள்ளார். அதாவது, சுமார் 1400 நடன கலைஞர்கள் பயன்படுத்தி வித்தியாசமாகவும், பிரமாண்டமாகவும் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.