Home இந்தியா தமிழகம்: ஏப்ரல் 16-இல் தேர்தல் பிரசாரம் முடிவு!

தமிழகம்: ஏப்ரல் 16-இல் தேர்தல் பிரசாரம் முடிவு!

690
0
SHARE
Ad

சென்னை: வருகிற 18-ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைப்பெற இருக்கும் வேளையில், தமிழகத்தின் மக்களவை மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

இம்முறை, அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ளன. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ளன. மேலும், இம்முறை நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இந்த தேர்தலை எதிர்கொள்கிறது.

தமிழகத்தின் தேர்தல் முடிவுகள், மத்தியில் ஆட்சி அமைவதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதால், இந்தியாவின் இரு பெரும் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸூம் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.