Home Photo News ஆஸ்ட்ரோவின் 2023 தீபாவளி முதல் ஒளிபரப்புகள்

ஆஸ்ட்ரோவின் 2023 தீபாவளி முதல் ஒளிபரப்புகள்

471
0
SHARE
Ad

ஆஸ்ட்ரோவின் 2023 தீபாவளி முதல் ஒளிபரப்புகள்

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை எங்கும் எப்போதும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

குறிப்பு: ஒளிபரப்பு விவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை

 

போர் தொழில் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

#TamilSchoolmychoice

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 4 நவம்பர், இரவு 9 மணி

இயக்குநர்: விக்னேஷ் ராஜா

நடிகர்கள்: ஆர். சரத்குமார், அசோக் செல்வன் & நிகிலா விமல்

வகை: குற்றவியல் திரில்லர் திரைப்படம்

ஒரு காவல்துறை அதிகாரித் தனது முதல் வழக்கில் வெற்றிப் பெற அவரது அச்சத்தைப் போக்க வேண்டும். ஒரு தொடர் கொலைகாரனைக் கைது செய்ய அவர் தனிமைப்படுத்தப்பட்ட மூத்த அதிகாரியுடன் கூட்டுச் சேர்ந்தார்.

 

விமானம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 5 நவம்பர், இரவு 9 மணி

இயக்குநர்: சிவ பிரசாத் யானாலா

நடிகர்கள்: சமுத்திரக்கனி, அனசுயா பரத்வாஜ், மாஸ்டர் துருவன் & ராகுல் ராமகிருஷ்ணா

வகை: நாடகத் திரைப்படம்

 

விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்றத் தனது மகனின் மிகப்பெரியக் கனவை நனவாக்க எண்ணும் ஒரு தந்தையின் முடிவில்லாதப் பயணம்.

 

தீபாவளி கொண்டாட்டம் 2023 (நேரலை)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 10 நவம்பர், இரவு 9 மணி

இயக்குநர்: குமரன் ராமசாமி

வகை: கச்சேரி,

 

இந்த நேரலைக் கச்சேரி, வசந்தம் எனும் சிங்கப்பூர் தொலைக்காட்சி அலைவரிசையிலும் ஓரே நேரத்தில் ஒளிபரப்பப்படும். பல்வேறுப் பிரபலமான உள்ளூர் திறமையார்களுடன் சிங்கப்பூர் பிரபலங்களானப் பாடகர்கள், ஷபீர் மற்றும் சுதாஷினி மற்றும் வானொலி அறிவிப்பாளரான, ஹலீமா ஆகியோர் பங்கேற்ப்பர். கோலாலம்பூரில் உள்ளப் புக்கிட் ஜாலில் அஜெண்டா சூரியா தீபாவளி கார்னிவலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து மலேசியர்களும் அழைக்கப்படுகிறார்கள்.

 

என் இவனிங் வித் சஞ்ஜை சுப்ரமணியன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)| 11-12 நவம்பர், காலை 9 மணி

இயக்குநர்: குமரன் ராமசாமி

கலைஞர்கள்: ஸ்ரீ சஞ்ஜை சுப்ரமணியன், ஸ்ரீ நெய்வேலி பி வெங்கடேஷ் (மிருதங்கம்) & ஸ்ரீ ஆலத்தூர் டி ராஜகணேஷ் (கஞ்சிரா)

வகை: இசை நிகழ்ச்சி

 

ஸ்ரீ சஞ்ஜை சுப்ரமணியனின் கர்நாடக இசை நிகழ்ச்சி.

 

மகள் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 11 நவம்பர், காலை 10 மணி

இயக்குநர்: சத்யன் அந்திக்காடு

நடிகர்கள்: ஜெயராம், மீரா ஜாஸ்மின் & நஸ்லன் கே. கஃபூர்

வகை: குடும்ப நாடகத் திரைப்படம்

 

பல்வேறுக் காரணங்களுக்காக உறவுகள் துண்டிக்கப்பட்டப் பிறகுப் பெற்றோருடன் மீண்டும் இணைவதில் உள்ளத் தடைகளைப் பற்றியக் கதை.

ஷ்ரத்தாஞ்சலி டு வாணி ஜெய்ராம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)| 11 நவம்பர், காலை 10.30 மணி

கலைஞர்கள்: எஸ்பிபி சரண், எஸ்பி சைலஜா, மனோ, கல்பனா & பலர்

வகை: இசை நிகழ்ச்சி

மறைந்த ஸ்ரீமதி வாணி ஜெய்ராம் அவர்கள் விட்டுச் சென்ற இசையைப் போற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சி, அவரது இசையின் மாயாஜாலத் தருணங்களை நினைவுக் கூரும். எஸ்பிபி சரண், எஸ்பி சைலஜா, மனோ, கல்பனா மற்றும் பலப் பாடகர்கள் பாடி அசத்தும் இசை ஜாம்பவானின் ஆத்மார்த்தமான மெல்லிசைகளைக் கேட்டு மகிழுங்கள். 

கங்குபாய் காத்தியவாடி

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) | 11 நவம்பர், பிற்பகல் 2 மணி

இயக்குநர்: சஞ்ஜை லீலா பன்சாலி

நடிகர்கள்: ஆலியா பட், சாந்தனு மகேஸ்வரி, அஜய் தேவ்கன்& கத்ரீனா கைஃப்

வகை: குற்றவியல் நாடகத் திரைப்படம் 

மனிதக் கடத்தலுக்குப் பலியாகியப் பிறகு, தான் ஒரு காலத்தில் சிப்பாயாக இருந்த உலகத்தை ஆள அங்குள்ளத் தொடர்புகளை ஓர் இளம் பெண் பயன்படுத்துகிறார். 

லக்கிமேன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 11 நவம்பர், பிற்பகல் 2 மணி

இயக்குநர்: பாலாஜி வேணுகோபால்

நடிகர்கள்: யோகி பாபு, வீரா & ரைச்சல் ரெபேக்கா

வகை: நகைச்சுவை நாடகத் திரைப்படம்

உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறிய எண்ணும் ஒரு மனிதனைப் பற்றியக் கதை. 

மீனா 40 (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) | 11-12 நவம்பர், மாலை 5 மணி

கலைஞர்கள்: மீனா, ரஜினிகாந்த், குஷ்பு, போனி கபூர், ஜீவா, சரத் குமார், ராதிகா சரத் குமார், சங்கர், ரோஜா, பிரபுதேவா & சினேகா

வகை: கச்சேரி

 

சினிமாத் துறையில் நடிகை மீனாவின் 40 ஆண்டுகாலப் பயணத்தைக் கொண்டாடும் ஒரு பிரமாண்ட நிகழ்ச்சி. 

பீட்சா 3 (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 11 நவம்பர், இரவு 9 மணி

இயக்குநர்: மோகன் கோவிந்த்

நடிகர்கள்: அஸ்வின் காக்குமானு & பவித்ரா மாரிமுத்து

வகை: திகில் திரில்லர் திரைப்படம் 

தான் உணவு விநியோகம் செய்யும் இடத்தில் நடக்கும் கொலைகளைத் தீர்க்கும் பணியில் கதாநாயகன் இருக்கிறார். 

அமர்க்கள தீபாவளி 2023 (நேரலை)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) | 11 நவம்பர், இரவு 10 மணி

வகை: இசை நிகழ்ச்சி

 

சிங்கப்பூர் தொகுப்பாளர்களான உதய சௌந்தரி மற்றும் கார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து சுரேஷ் (ராகா) தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடனங்களும் அற்புதமானத் தொகுப்புகளும் இடம்பெறும்

கிக் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 12 நவம்பர், காலை 10 மணி

இயக்குநர்: பிரசாந்த் ராஜ்

நடிகர்கள்: சந்தானம், தன்யா ஹோப், மன்சூர் அலிகான் & மனோபாலா

வகை: நகைச்சுவை நாடகத் திரைப்படம்

 

கோபமான முதலீட்டாளர்களால் துரத்தப்பட்டப் பிறகு, ஓர் இளம் விளம்பர இயக்குனருக்குத் திடீரெனத் தலைமை நிர்வாக அதிகாரியின் மகனாக மாறுவேடமிட்டு உலகளாவிய நிறுவனத்தைக் கைப்பற்றும் வாய்ப்புக் கிடைத்தது. 

சிறப்பு ராசிப்பலன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) | 12 நவம்பர், காலை 10.30 மணி

இயக்குநர்: ஆருந்திரா மதியழகன்

ஜோதிடம்: டாக்டர் சாரங்கபாணி (ஜோதிடர்)

வகை: ஜோதிடம்

இந்தத் தீபாவளி, உங்கள் ராசிகளுக்கு என்னப் பலன் தருகிறது என்பதைக் கண்டறிக. அருள் செல்வன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஜோதிடர் டாக்டர் சாரங்கபாணி கலந்துக் கொள்வார். 

பி. சுசீலா 70 (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) | 12 நவம்பர், காலை 11 மணி

கலைஞர்கள்: கவிப்பேரரசு வைரமுத்து, வெண்ணிறடை நிர்மலா, பாரதி, லதா, காஞ்சனா, ஜெயசித்ரா, சச்சு, எஸ்பிபி சரண், உன்னி மேனன், ஆனந்து, முகேஷ், சாய் விக்னேஷ், எல்.ஆர். ஈஸ்வரி, கே.எஸ். சித்ரா, உமா ரமணன், அனுராதா ஸ்ரீராம், கல்பனா, ஸ்வேதா மோகன், மஹதி, சைந்தவி & பலர்

வகை: இசை நிகழ்ச்சி

பின்னணிப் பாடகியாக 70 பொன் ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவுச் செய்த இந்தியச் சினிமாவின் நைட்டிங்கேல் பி.சுசீலாவை கௌரவிக்கும் நிகழ்ச்சி.

 

ரசிக்க ருசிக்க தீபாவளி ஸ்பெஷல் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 12 நவம்பர், பிற்பகல் 12.30 மணி

இயக்குநர்: நளினி தங்கராஜ்

தொகுப்பாளர்: பால கணபதி வில்லியம்

வகை: உணவுப் பயண நிகழ்ச்சி

 

பிரபலமான உணவுப் பயண நிகழ்ச்சி மேலும் பல உணவுச் சாகசங்களுடன் ஏழாவதுச் சீசனாக ஒளிபரப்பாகவுள்ளது.

 

பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் ஐகான் விருதுகள் 2023 (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 12 நவம்பர், பிற்பகல் 1.30 மணி

வகை: விருதுகள் நிகழ்ச்சி

 

திரைப்படத் துறையில் கலைஞர்கள் ஆற்றியப் பங்களிப்பிற்காக ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்ச்சி. இவ்வாண்டுக் கொண்டாட்டத்தில் அல்லு அர்ஜுன், எஸ்திஆர், திரிஷா, ஏஆர் ரகுமான் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்!

 

அடை மழைக் காலம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) | 12 நவம்பர், பிற்பகல் 2 மணி

இயக்குநர்: கார்த்திக் சாமளன்

நடிகர்கள்: எவராணி, ஜெய்கிஷன் & தியா லக்ஷனா

வகை: நாடகக் கற்பனைத் திரைப்படம்

 

நித்திய அன்பின் அர்த்தத்தையும் அதன் நோக்கத்தையும் புரிந்துக்கொள்வதற்கானப் பயணத்தைத் தொடங்கும் ஓர் இளைஞனின் கதை.

 

மாங்கல்யம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 12 நவம்பர், மாலை 4 மணி

இயக்குநர்: நசிரா இப்ராஹிம்

நடிகர்கள்: விகடகவி, சுகுமாரன், ஜேம்ஸ், தாஷா & ஹம்ஷினி பெருமாள்

வகை: காதல் நாடக டெலிமூவி

 

பெற்றோரின் கட்டாயப்படுத்தலால் திருமணத்தில் விருப்பமில்லாமல் திருமணம் செய்துக் கொண்ட மூன்று சகோதரர்கள் ஒரு வருடத்தில் தங்கள் மனைவிகளை விவாகரத்துச் செய்தனர். மூவரும் தங்கள் முன்னாள் மனைவிகளின் மீது காதல் வயப்படுவதால் அவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராதத் திருப்பம் ஏற்படுகிறது. அவர்கள் சமரசம் செய்து மகிழ்ச்சியாக வாழ்வார்களா?

 

ராங்கி ரகலை (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 12 நவம்பர், மாலை 6 மணி

இயக்குநர்: ஷாலினி பாலசுந்தரம்

தொகுப்பாளர்: டேனேஸ் குமார்

வகை: ரியாலிட்டி நிகழ்ச்சி

 

பொது இடங்களில் கேளிக்கையானச் சவால்களுடன் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியை, டேனேஸ் குமார் தொகுத்து வழங்குவார்.

 

பேமிலி பியூட் மலேசியா தமிழ் (அத்தியாயம் 16 முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 12 நவம்பர், மாலை 7 மணி

இயக்குநர்: குமரன் ராமசாமி

தொகுப்பாளர்: ராம்

கலைஞர்கள்: ஷாமினி ஷ்ரதா, ஹரிஹரன், ஐரிஸ், ஹஸ்மிதா, விக்கி கசாடர், தாஷா, ஹூமேஷ் & ஜெய்ஸ்ரீ

வகை: விளையாட்டு நிகழ்ச்சி

மேடையில் முதல் கேள்விக்குப் பதிலளிக்கப் போட்டியிடும் இரு அணித் தலைவர்களுடன் விளையாட்டு தொடங்கும். அதிவேகமாகப் பசரை அழுத்தும் போட்டியாளருக்குப் பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்படும். கொடுக்கப்பட்டப் பதில் ‘ஆய்வுப்’ பதில்களின் பட்டியலில் உயர்ந்த இடத்தில் இருந்தால், அடுத்தடுத்தப் பதில்களை யூகிக்க அக்குழுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இல்லையெனில், பட்டியலில் உயர்ந்த இடத்தில் உள்ளப் பதில்களை எதிரணியினர் யூகிக்க முயற்சிப்பர். பட்டியலில் இடம்பெரும் பதில்கள் உள்நாட்டில் 100 பங்கேற்பாளர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அமைந்தவையாகும். ரிம5,000 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்ல, விரைவானப் பணச் சுற்றில் (fast money) பங்கேற்க்க அதிக மதிப்பெண்களைப் பெற்ற அணிக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

 

கனவு மெய்ப்படும் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 12-15 நவம்பர், இரவு 8 மணி

இயக்குநர்: கபிலன் புளோண்டரன்

தொகுப்பாளினி: சுஷ்மீதா முருகன்

கலைஞர்கள்: தீபக் தேவரமேஷ், டாக்டர் ஜி பெருமாள், ஜீவராஜ் சந்தராஜு & தாரணி மாரியப்பன்

வகை: ரியாலிட்டி நிகழ்ச்சி

 

இந்த நிகழ்ச்சிப் பார்வையாளர்களின் இதயங்களைத் தொடும். மேலும் பாமர மக்கள் தங்களின் கனவுகளைத் தொடர ஊக்குவிக்கும். நம்பிக்கை, உத்வேகம் மற்றும் மிகவும் எதிர்பாராத வழிகளில் கூடக் கனவு நனவாகும் என்பதை ஒவ்வொரு அத்தியாயத்திலும் இந்நிகழ்ச்சி உணர்த்தும்.

 

எங்க வீட்டு செஃப் (அத்தியாயம் 25 முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) | 12 நவம்பர், இரவு 8 மணி

இயக்குநர்: ராணி சுந்தரராஜூ

கலைஞர்: ஸ்ரீ குமரன்

வகை: சமையல் நிகழ்ச்சி

 

உள்ளூர் பிரபலங்கள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்கள் தங்களுக்குப் பிடித்தச் சமையல் குறிப்புகளைப் பகிர்ந்துக் கொள்ளும் ஒரு வேடிக்கையானச் சமையல் நிகழ்ச்சி.

 

தசரா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) | 12 நவம்பர், இரவு 9 மணி

இயக்குநர்: ஸ்ரீகாந்த் ஒடேலா

நடிகர்கள்: நானி, கீர்த்தி சுரேஷ், தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரக்கனி, சாய் குமார் & ஷாம்னா காசிம்

வகை: அதிரடி நாடகத் திரைப்படம்

 

நிலக்கரிச் சுரங்கத்தை நம்பியிருக்கும் ஓர் ஊரில், கிராமத் தலைவரின் மகனுடன் சண்டையிடும் மூன்று பால்ய நண்பர்களின் வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படுகின்றன.

 

பரம்பொருள் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 12 நவம்பர், இரவு 9 மணி

இயக்குநர்: சி.அரவிந்த் ராஜ்

நடிகர்கள்: ஆர்.சரத்குமார், அமிதாஷ் பிரதன் & பாலாஜி

வகை: குற்றவியல் திரில்லர் திரைப்படம்

 

ஒரு கோவிலில் உள்ளப் புனிதச் சிலைகளைக் கடத்தும் குண்டரையும், பணம் சம்பாதிப்பதற்காக அவருடன் தொடர்பு வைத்திருக்கும் ஒரு காவல்துறை அதிகாரியையும் சித்தறிக்கிறது.

 

சித் ஸ்ரீராம் ஹார்ட் & சோல் 3.0 (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 13 நவம்பர், பிற்பகல் 2 மணி

இயக்குநர்: குமரன் ராமசாமி

வகை: இசை நிகழ்ச்சி

 

பிரபல இந்தியப் பாடகர் சித் ஸ்ரீராம் பங்கேற்ற இசை நிகழ்ச்சி.

 

காவல் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) | 13 நவம்பர், பிற்பகல் 2 மணி

இயக்குநர்: ஆர். லாரன்ஸ்

நடிகர்கள்: ஆர். லாரன்ஸ், திவ்யா நாயுடு, அகோண்டரன், சகாதேவன் & சாந்தினி

வகை: அதிரடி திரில்லர் திரைப்படம்

 

ஏஎஸ்பி லாரன்ஸ் மற்றும் அவரதுக் குழுவான இன்ஸ்பெக்டர் எலேனா, இன்ஸ்பெக்டர் திவ்யா மற்றும் இன்ஸ்பெக்டர் அகோ ஆகியோர் போதைப்பொருள் மற்றும் மனிதக் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளை வேட்டையாட முடிவுச் செய்கின்றனர். அவர்கள் தங்கள் பணியில் வெற்றிப் பெறுவார்களா என்பதேக் கதையின் முக்கிய அம்சமாகும்.

 

டி. இம்மான் லைவ் இன் கான்செட் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) | 13 நவம்பர், மாலை 5 மணி

கலைஞர்கள்: ரஞ்சித், ஹரிசரண், சந்தோஷ், வைக்கோம் விஜயலட்சுமி, வந்தனா ஸ்ரீனிவாசன் & பூஜா

வகை: கச்சேரி

 

டி.இம்மானின் இசையில் மலர்ந்தச் சிலப் பிரபலப் பாடல்களைப்  பாடகர்களான ரஞ்சித், ஹரிசரண், சந்தோஷ், வைக்கோம் விஜயலட்சுமி, வந்தனா ஸ்ரீனிவாசன் மற்றும் பூஜா ஆகியோர் பாடி அசத்தும் கச்சேரி.

 

படேப் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 13 நவம்பர், இரவு 9 மணி, திங்கள்வியாழன்

இயக்குநர்: ஜோசுவா மைக்கேல்

நடிகர்கள்: ஜோசுவா மைக்கேல் & அகல்யா மணியம்

வகை: நகைச்சுவை நாடகத் தொடர்

 

ஜோசுவா மைக்கேலும் அவரதுக் குழுவினரும் தங்களின் பேபிமா பேக்கரியைத் திரும்பப் பெறப் போராடுகிறார்கள்.

தலைநகரம் 2 (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 203) | 13 நவம்பர், இரவு 9 மணி

இயக்குநர்: வி. சட். துரை

நடிகர்கள்: சுந்தர் சி & பலக் லல்வானி

வகை: அதிரடி நாடகத் திரைப்படம்

 

ஒரு நல்ல உள்ளம் கொண்ட, அச்சமற்ற முன்னாள் குண்டர் தன்னைச் சுற்றியுள்ளப் பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க விரும்புகிறார். ஆனால் நகரை ஆளும் மூன்று குற்றவாளிகள் அவரை அவ்வாறுச் செய்யவிடாமல் தொந்தரவுச் செய்கின்றனர்.

 

ரத்தம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 13 நவம்பர், இரவு 9.30 மணி

இயக்குநர்: சி.எஸ்.அமுதன்

நடிகர்கள்: விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார் & நந்திதா ஸ்வேதா

வகை: குற்றவியல் திரில்லர் திரைப்படம்

 

ஒரு வெறித்தனமான இரசிகரால் நண்பர் ஒருவர் கொலைச் செய்யப்பட்டப் பிறகுப், பதிப்பக ஆசிரியர் தனதுப் பழையப் பணியிடத்திற்குத் திரும்ப வேண்டியக் கட்டாயத்தில் உள்ளார்.

 

கிறிஸ்டோபர் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) | 13 நவம்பர், இரவு 10 மணி

இயக்குநர்: பி.உண்ணிகிருஷ்ணன்

நடிகர்கள்: மம்முட்டி, வினய் ராய், சினேகா, அமலா பால், ஐஸ்வர்யா லட்சுமி & அதிதி ரவி

வகை: அதிரடி திரில்லர் திரைப்படம்

 

ஓர் ஐபிஎஸ் அதிகாரியானக் கிறிஸ்டோபர் ஆண்டனி, முறைத் தவறும்போது நீதியை நிறைவேற்றுகிறார். அவர் குற்றவாளிகளைக் கொலைச் செய்கையில், ​​​​ஏசிபி சுலேகா அவரைத் தடுக்கப் புறப்படுகிறார்.

 

நான் கடவுள் இல்லை (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 14 நவம்பர், பிற்பகல் 2 மணி

இயக்குநர்: எஸ்.ஏ.சந்திரசேகர்

நடிகர்கள்: சமுத்திரக்கனி & சாக்ஷி அகர்வால்

வகை: அதிரடி நாடகத் திரைப்படம்

 

ஓர் ஆதறவற்றச் சிறுமி புதிய ஆடைகள் கேட்டுக் கடவுளுக்குக் கடிதம் எழுதுகிறாள். கடிதத்தைப் பெற்றத் தொழிலதிபர் திரு. ஜோதிலிங்கம் சிறுமியின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார். உமா தன் குடும்பத்தைத் தீமையிலிருந்துக் காப்பாற்றக் கடவுளுக்குக் கடிதம் எழுதுகிறாள். கடவுள் அவளுடையக் கோரிக்கையை நிறைவேற்றுவாரா?

 

தி ரோட் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 14 நவம்பர், இரவு 9.30 மணி

இயக்குநர்: அருண் வசீகரன்

நடிகர்கள்: திரிஷா கிருஷ்ணன், ஷபீர் கல்லாரக்கல் & மியா ஜார்ஜ்

வகைகுற்றவியல் திரில்லர் திரைப்படம்

 

ஊடகவியலாளரான மீரா மற்றும் கல்லூரிப் பேராசிரியையான மாயா ஆகியோரின் வாழ்க்கையில் தேசிய நெடுஞ்சாலை எப்படி முதன்மை மோதலாக மாறி அவர்களின் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றுகிறது என்பதேக் கதை.

 

கழுவேத்தி மூர்க்கன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 203) | 15 நவம்பர், இரவு 9 மணி

இயக்குநர்: எஸ் வய் கௌதம்ராஜ்

நடிகர்கள்: அருள்நிதி & துஷாரா விஜயன்

வகை: அதிரடி நாடகத் திரைப்படம்

 

மூர்க்கனும் பூமிநாதனும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் நண்பர்கள். பூமிநாதன் அமைதியானவர், மூர்க்கன் முரட்டுத்தனமானவர். யாரோ ஒருவர் அவர்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தும் போது என்ன நடக்கும்?

 

யானை முகத்தான் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 15 நவம்பர், இரவு 9.30 மணி

இயக்குநர்: ரெஜிஷ் மிதிலா

நடிகர்கள்: யோகி பாபு, ஊர்வசி, கருணாகரன் & ரமேஷ் திலக்

வகை: கற்பனை நகைச்சுவைத் திரைப்படம்

 

விநாயகப் பெருமானின் பக்தரான ஓர் ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் தனது அன்றாட வாழ்க்கையில் நேர்மையற்றச் செயல்களைச் செய்யும்போது தனக்குப் பிடித்தக் கடவுளைக் காண முடியாமல் போகிறது.

 

ஸ்ட்ரைக்கர் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 203) | 16 நவம்பர், இரவு 9 மணி

இயக்குநர்: எஸ்.ஏ.பிரபு

நடிகர்கள்: ஜஸ்டின் விஜய் ஆர் & வித்யா பிரதீப்

வகை: திரில்லர் நாடகத் திரைப்படம்

 

சித்த மருத்துவ மாணவி, ஜோஷி மற்றும் யூடியூபர், பிரியா இருவரும் பேய் இருப்பதாகக் கூறப்படும் பங்களாவில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதையின் மையக்கரு.

 

லவ் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 16 நவம்பர், இரவு 9.30 மணி

இயக்குநர்: ஆர்.பி பாலா

நடிகர்கள்: பரத், வாணி போஜன் & ராதா ரவி

வகை: காதல் திரில்லர் திரைப்படம்

 

 

அஜய் மற்றும் திவ்யா ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். ஆனால், திருமணமான ஒரே வருடத்தில் அவர்களின் வாழ்க்கைத் தலைகீழாக மாறுகிறது.