Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : பன்னாட்டு முதல் ஒளிபரப்புகளுடன் கோலாகல நிகழ்ச்சிகள்

ஆஸ்ட்ரோ : பன்னாட்டு முதல் ஒளிபரப்புகளுடன் கோலாகல நிகழ்ச்சிகள்

453
0
SHARE
Ad

ஆஸ்ட்ரோ இத்தீபத் திருநாளைக் கண்கவர் உள்ளூர் மற்றும் பன்னாட்டு தீபாவளி முதல் ஒளிபரப்புகளுடன் வரவேற்கிறது

கோலாலம்பூர் – டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் துடிப்பான உள்ளூர் மற்றும் பன்னாட்டு தீபாவளி முதல் ஒளிபரப்புகளின் மகத்தான உள்ளடக்கங்களுடன் தீபத் திருநாளை ஆஸ்ட்ரோ கொண்டாடுகிறது.

இந்தப் பண்டிகைக் காலத்தில், வானொலியான ராகா மற்றும் மின்னியல் தளமான ஆஸ்ட்ரோ உலகம் ஆகியவற்றில் தீபாவளிச் சிறப்புகளை அனைத்து மலேசியர்களும் எதிர்ப்பார்க்கலாம்.

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “தீபாவளி உள்ளடக்கம் என்று வரும்போது எங்களின் வாடிக்கையாளர்கள் விரும்பத்தக்க நிகழ்ச்சிகளைக் கண்டுக் களிப்பதை உறுதிச்செய்யும் வகையில் எங்களின் அனைத்து தளங்களிலும் உள்ளுர் மற்றும் பன்னாட்டு முதல் ஒளிபரப்புகளை உள்ளடக்கிய உயர்தரப் பொழுதுபோக்கை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களின் தீபாவளி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைக் கொள்கிறோம். “கொண்டாடுவோம் செம்மையாகக் கொண்டாடுவோம்” என்ற இந்த ஆண்டின் கருப்பொருளுக்கு ஏற்பக், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அர்த்தமுள்ளப், பிரகாசமான மற்றும் சிறந்தப் பிணைப்பைக் கொண்டாட இப்பண்டிகை ஒரு சிறந்தச் சந்தர்ப்பமாக இருக்கட்டும்.

#TamilSchoolmychoice

“ரியாலிட்டி நிகழ்ச்சிகள், நேரலைக் கச்சேரி, நேரலை இசை நிகழ்ச்சி, டெலிமூவி, உணவுப் பயண நிகழ்ச்சி, தொடர், விருதுகள் நிகழ்ச்சி மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அனைவருக்கும் ஏற்ற பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ வழங்குகிறது. மேலும், எங்கள் மின்னியல் தளமான ஆஸ்ட்ரோ உலகம் வழங்கும் ‘யார் அந்த கண்ணா’ போட்டியின் மூலம் மலேசியர்கள் 50,000 ரிங்கிட் வரை உற்சாகமான ரொக்கப் பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பைப் பெற முடியும் என்பதைப் பகிர்ந்துக் கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றித் தெரிவிப்பதோடுத் திருநாளைக் கொண்டாடுபவர்களுக்குத், தீபாவளி நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

ரியாலிட்டி நிகழ்ச்சிகள், கனவு மெய்ப்படும் மற்றும் ராங்கி ரகளை; காதல் நாடக டெலிமூவி, மாங்கல்யம்; சிங்கப்பூர் தொலைக்காட்சி அலைவரிசையான வசந்தம்-இல் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்படும் நேரலைக் கச்சேரி, தீபாவளி கொண்டாட்டம் 2023; உணவுப் பயண நிகழ்ச்சி, ரசிக்க ருசிக்க தீபாவளி ஸ்பெஷல்; நகைச்சுவை நாடகத் தொடர், படேப் மற்றும் பல விரிவான உள்ளூர் தீபாவளி சிறப்புகளின் முதல் ஒளிபரப்பை ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) -இல் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.
மேலும், நாடகக் கற்பனை, அடை மழைக் காலம் மற்றும் அதிரடி திரில்லர், காவல் உள்ளிட்ட உள்ளூர் தமிழ் திரைப்படங்கள்; உள்ளூர் திறமையாளர்களானச் சுரேஷ் (ராகா), ஹஷ்மிதா மற்றும் சபேஷ் மன்மதன் ஆகியோர் பங்கேற்க்கும் சிங்கப்பூர் நேரலை இசை நிகழ்ச்சி, அமர்க்கள தீபாவளி 2023 ஆகிய முதல் ஒளிபரப்புக் காணும் நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். அது மட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் இந்தியாவில் இருந்து விரும்பத்தக்கத் தீபாவளி நிகழ்ச்சிகளைக் கண்டுக் களிக்கலாம்:

• ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் முதல் ஒளிபரப்புக் காணும் இசை நிகழ்ச்சிகள், என் இவனிங் வித் சஞ்ஜை சுப்ரமணியம், ஷ்ரத்தாஞ்சலி டு வாணி ஜெய்ராம், மற்றும் பி. சுசீலா 70; கச்சேரிகள், டி. இம்மான் லைவ் இன் கான்செட் மற்றும் மீனா 40; திரைப்படங்கள், அதிரடி நாடகம், தசரா, மற்றும் அதிரடி திரில்லர், கிறிஸ்டோபர்; மற்றும் பல.

• ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் முதல் ஒளிபரப்புக் காணும் நகைச்சுவை நாடகம், லக்கிமேன் மற்றும் கிக்; திகில் திரில்லர், பீட்சா 3; குற்றவியல் திரில்லர், போர் தொழில், பரம்பொருள், தி ரோட் மற்றும் ரத்தம்; காதல் நகைச்சுவை, லெட்ஸ் கெட் மேரிட்; காதல் திரில்லர், லவ்; அதிரடி-நாடகம் நான் கடவுள் இல்லை; மற்றும் பல.

• ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 203)-இல் முதல் ஒளிபரப்புக் காணும் திரைப்படங்கள், அதிரடி-நாடகம், கழுவேத்தி மூர்க்கன் மற்றும் தலைநகரம் 2; திரில்லர் நாடகம், ஸ்ட்ரைக்கர்; மற்றும் பல.

டிவி, ராகா வானொலி மற்றும் ஆஸ்ட்ரோ உலகத்தின் சமூக வலைத்தளங்களில் கிடைக்கப் பெறும் ‘கொண்டாடுவோம் செம்மையாகக் கொண்டாடுவோம்’ எனும் எங்களின் அசல் தீபாவளிப் பாடலையும் வாடிக்கையாளர்கள் கேட்டு இரசிக்கலாம். கோலாலம்பூர், புக்கிட் ஜாலீல், அஜெண்டா சூரியா தீபாவளி கார்னிவலில் நடைப்பெறும் இந்த நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள அனைத்து மலேசியர்களும் அழைக்கப்படுகிறார்கள்:

ஆஸ்ட்ரோவில் ஆட்டோ டெபிட்*-க்குப் பதிவுச் செய்யும் அனைத்து மலேசியர்களும் ஆஸ்ட்ரோ பிரைமரி (Astro Primary), பொழுதுபோக்கு (Entertainment) அல்லது திரைப்படங்கள் (Movies) தொகுப்புகளுக்கு 30% வரை தள்ளுபடியைப் பெறுவார்கள், மாதத்திற்கு ரிம41.99 கட்டணத்துடன் இது தொடங்கும். 24 மாதங்களில் ரிம 600-க்கு மேலானச் சேமிப்புக்கு இது வழிவகுக்கிறது. ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) மற்றும் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) உள்ளிட்ட வசீகரிக்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச உள்ளடக்கத்துடன் 75-க்கும் மேற்பட்ட அலைவரிசைகளுக்கான அணுகலை ஆஸ்ட்ரோ பிரைமரி தொகுப்பு வழங்குகிறது.

மேல் விபரங்களுக்கு www.astroulagam.com.my/SemmeDeepavali எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

*புதியப் பிரைமரி, பொழுதுபோக்கு மற்றும் திரைப்படங்கள் தொகுப்புகளுக்கு முதன் முறையாக ஆட்டோ டெபிட்*-க்குப் பதிவுச் செய்யும் வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்தச் சலுகைக்குத் தகுதியுடையவர்கள். நிபந்தனைகளுக்கு உட்பட்டது