Home இந்தியா ஷாருக்கானுக்கு இந்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டுமென பாகிஸ்தான் அமைச்சர் கூறுகிறார்

ஷாருக்கானுக்கு இந்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டுமென பாகிஸ்தான் அமைச்சர் கூறுகிறார்

849
0
SHARE
Ad

Shahrukh-Sliderஇஸ்லாமாபாத், ஜன. 29- ஆங்கில நாளிதழுக்கு சமீபத்தில் பேட்டியளித்த இந்தி நடிகர் ஷாருக்கான், ‘என் சொந்த நாடான இந்தியாவை விட அண்டை நாடான பாகிஸ்தானுக்கு நான் விசுவாசமாக இருப்பதாக சில தருணங்களில் என் மீது குற்றம் சாட்டப்பட்டது.

“எனது தந்தை இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர். நான் ஒரு முழுமையான இந்தியன் என்பது தெரிந்திருந்தும் என்னை எதிர்த்து பேரணிகள் நடந்தன. இந்த பேரணிகளில் பங்கேற்ற தலைவர்களில் சிலர், நான் இந்தியாவை விட்டு வெளியேறி பாகிஸ்தானுக்கு சென்றுவிட வேண்டும் என்று அறிவுறுத்தினர்.”

இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு தேசபக்தி என்பதே இல்லை என்று நினைக்கும் சிலரால், நேரடியாக தாக்கப்படும் ஒருவனாக சில வேளைகளில் நான் இலக்காகி உள்ளேன்’ என்று கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

இதனையொட்டி, பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் முஹம்மது சயீத் கூறுகையில், ‘நடிகர் ஷாருக்கானுக்கு இந்தியாவில் பாதுகாப்பற்ற சூழ்நிலை இருக்குமேயானால், அவர் பாகிஸ்தானுக்கு வந்து விடலாம். அவருக்கு பாகிஸ்தான் உரிய மரியாதையை வழங்கும்’ என்றார்.

இந்திய குடியரசு தினத்தையொட்டி இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தலைமை தூதர் அலுவலகத்தில் நடைபெற்ற விருந்தில் பங்கேற்ற பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் நிருபர்களிடம் பேசிய போது கூறியதாவது:-

“நடிகர் ஷாருக்கான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களால் நேசிக்கப்படுபவர். அவரை எதிர்த்து பேசுபவர்களும் அவரை மிரட்டுபவர்களும் தங்களது செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும். கலைஞர்கள் அன்பை வெளிப்படுத்துபவர்கள். அவர்களை ஒருமைப்பாட்டின் அடையாளமாக போற்றி அவர்கள் மீது நாமும் அன்பு செலுத்த வேண்டும்

ஷாருக்கான் இந்தியாவில் பிறந்தவர். இந்திய குடிமகனாக இருக்கவே அவர் விரும்புவார். அவரைப் பற்றி எதிர்மறையாக பேசி வரும் இந்திய சகோதர – சகோதரிகள் அவர் ஒரு சினிமா நட்சத்திரம் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். அவருக்கு பாதுகாப்பு வழங்கும்படி இந்திய அரசை நான் கேட்டுக் கொள்கிறேன்.”