Home நாடு “மஇகாவை அன்வார் புறக்கணித்தார் என்றாலும் ஒற்றுமை அரசாங்கத்தை தொடர்ந்து ஆதரிப்போம்” – சரவணன்

“மஇகாவை அன்வார் புறக்கணித்தார் என்றாலும் ஒற்றுமை அரசாங்கத்தை தொடர்ந்து ஆதரிப்போம்” – சரவணன்

340
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர் ஜசெகவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு ஆதரவாக மஇகா பிரச்சாரம் செய்து வருகிறது. மஇகாவின் பிரச்சாரத்தை அந்தத் தொகுதியில்  முன் நின்று தலைமை தாங்கி நடத்தி வருபவர் அந்தக் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன்.

கடந்த மே இரண்டாம் தேதி கோலகுபுபாருவில் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது பேசிய சரவணன் “பிரதமர் அன்வார் இப்ராஹிம் தங்கள் மஇகா கட்சியை புறக்கணித்தார் என்றாலும் நாங்கள் தொடர்ந்து  அவரின் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரித்து வருவோம்” எனக் குறிப்பிட்டார்.

“தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளான மசீச, மஇகா இரண்டும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு தந்தாலும் எல்லாப் பதவிகளையும் அவர்களே எடுத்துக் கொண்டு எங்களுக்கும் ஒன்றும் தராமல் புறக்கணித்து விட்டார்கள். இதனால் நாங்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றோம். இருப்பினும் நாங்கள் அன்வாரின் அரசாங்கத்தை தொடர்ந்து ஆதரிப்போம்” என்றும் சரவணன் உறுதிமொழி வழங்கினார்.

#TamilSchoolmychoice

கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் நன்கு சிந்தித்து புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். எதிர்க்கட்சி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், இந்த தொகுதியில் மிக மெதுவான அளவிலேயே மேம்பாடுகள் வந்தடையும் என்பதையும் வாக்காளர்கள் மறக்கக்கூடாது என அவர் தெரிவித்தார்.

வாக்களிப்பின் மூலம் தங்களின் முக்கியத்துவத்தையும் தங்களின் வாக்கின் வலிமையையும் இந்தியர்கள் எடுத்துக்காட்ட வேண்டியது அவசியம் என்றாலும் அதைக் காட்ட வேண்டிய களம் கோலகுபு பாரு இடைத்தேர்தல் அல்ல, அடுத்த பொதுத் தேர்தல்தான் எனவும் சரவணன் வலியுறுத்தினார்.

“அடுத்த பொதுத் தேர்தல் வரை காத்திருந்து நம்மால் என்ன செய்ய முடியும் என்பதைப் புரியவைப்போம். ஆளும் அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் கட்சியின் வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் அவரால் அந்த தொகுதிக்கு நிறைய அளவில் மேம்பாடுகளை கொண்டு வர முடியும்” என்றும் சரவணன் இந்திய வாக்காளர்களுக்கு நினைவூட்டினார்.