Home உலகம் கடல் நடுவில் கஞ்சா வியாபாரம்

கடல் நடுவில் கஞ்சா வியாபாரம்

570
0
SHARE
Ad

kanja01இலங்கை, ஏப்ரல் 27-நடுக் கடலில் கஞ்சா வியாபாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத கஞ்சா வர்த்தக நடவடிக்கைகளுடன் இலங்கை இந்திய மீனவர்களுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

100 கிலோ கஞ்சாவுடன் நான்கு இந்திய மீனவர்ளும், இரண்டு இலங்கைத் தமிழ் மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கச்சத்தீவு கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்தியாவிலிருந்து படகு மூலம் கஞ்சா கொண்டு செல்லப்பட்டதாகவும், அந்த கஞ்சாவை இலங்கைக்கு கொண்டு செல்ல இலங்கை மீனவர்கள் படகு ஒன்றை எடுத்துச் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.