Home அரசியல் ‘ம.இ.காவும் சரவணனும் 12 நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்?” – வசந்த குமார் கேள்வி

‘ம.இ.காவும் சரவணனும் 12 நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்?” – வசந்த குமார் கேள்வி

711
0
SHARE
Ad

Vasanthakumar-Feature---2தாப்பா, ஏப்ரல் 27- சுல்கிப்ளியை வேட்பாளராக பிரதமர் அறிவித்த 12 நாட்களுக்கு பிறகு அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று டத்தோ சரவணன் கூறுவது வேடிக்கையாக இருப்பதாக தாப்பா நாடாளுன்றத் தொகுதியில் டத்தோ சரவணனை எதிர்த்து போட்டியிடும் வசந்தகுமார் கேள்வி எழுப்பினார்.

12 நாட்கள் கழித்து டத்தோ சரவணனுக்கு ஞானோதயம் வந்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய வசந்தகுமார், ம.இ.கா.வின் தேசியத் தலைவர் ஜி.டத்தோஸ்ரீ பழனிவேல் முன்னிலையில்தான் பிரதமர் சுல்கிப்ளியை ஷா ஆலாம் வேட்பாளராக அறிவித்தார்.

அப்பொழுது பழனிவேல் முகத்தில் எந்தவித சலனமோ, சலசலப்போ ஏற்படவில்லை. சுல்கிப்ளியை இந்தியர்கள் வேட்பாளராக ஏற்று கொள்வார்கள் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

#TamilSchoolmychoice

“ஆனால், தற்போது குறுஞ்செய்தி, காணொளி (வீடியோ), இணையத்தளம், இணைய அஞ்சல், முகநூல் ஆகியவற்றில் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதை தொடர்ந்து, தடார் என்று பல்டியடித்து தற்போது சுல்கிப்ளியை ஆதரிக்க வேண்டாம் என்று சரவணன் கூறி வருகிறார். இத்தனை நாட்கள் அவர் எங்கு சென்றிருந்தார்?” என்றும் வசந்தகுமார் சரவணனை சாடினார்.

இப்பொதுத் தேர்தலில் சுல்கிப்ளிக்கு வாய்ப்பு வழங்கப்படாதிருந்தால் அவர் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டார் என்றும் வசந்த குமார் கூறினார்.

“தோல்வி பயத்தில் சரவணன்”

இத்தனை நாட்களாக சுல்கிப்ளியைப் பற்றி கவலைப்படாத சரவணன் இன்றைக்கு தாப்பா தொகுதியில் சுல்கிப்ளி பிரச்சனையால் இந்தியர்கள் வாக்குகள் கிடைக்காது என்ற நிலையில், அதனால் தான் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் திடீரென்று சுல்கிப்ளிக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூறுகின்றார்.

ஆனால் சுல்கிப்ளிக்கு வாய்ப்பளித்த தேசிய முன்னணிக்கே ஒட்டு மொத்தமாக வாக்களிக்கக் கூடாது என்பதுதான் நாடு முழுதும் உள்ள இந்தியர்களின் இன்றைய நிலைப்பாடு என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதுநாள் வரை ம.இ.கா தேசியத் தலைவர் ஜி.பழனிவேலுவும் சுல்கிப்ளி, இப்ராகிம் அலி பற்றி கருத்து எதுவும் தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது ஏன்?” என்றும் வசந்தகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

வசந்தகுமாரின் கருத்துக்களை மலேசியாகினி இணையத் தள செய்திப் பத்திரிக்கை வெளியிட்டிருக்கின்றது.