Home நாடு விக்னேஸ்வரன், தீபாவளி வாழ்த்து -“வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த திருநாளாக இருக்கட்டும்”

விக்னேஸ்வரன், தீபாவளி வாழ்த்து -“வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த திருநாளாக இருக்கட்டும்”

101
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மலேசிய இந்துப் பெருமக்களுக்கு வழங்கிய தீபாவளி வாழ்த்துச் செய்தியில் “இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த திருநாளாக இருக்கட்டும்!” எனக் குறிப்பிள்ளார்.

மலேசியாவாழ் இந்துப் பெருக்களுக்கு தனது சார்பாகவும், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் சார்பாகவும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நல்ல சூழ்நிலையிலும், சிறப்பான முறையிலும் அனைத்து மஇகா கிளைத் தலைவர்களும், இந்திய சமூகத்தினரும் கொண்டாடி மகிழ விக்னேஸ்வரன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் விக்னேஸ்வரன்.

#TamilSchoolmychoice

“வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதற்கொப்ப அனைவரின் இல்லங்களிலும் பிரச்சனைகள் இருந்தாலும், அனைவரும் மகிழ்ச்சியுடன் இந்தத் தீபாவளியைக் கொண்டாடி மகிழவேண்டும்” என விக்னேஸ்வரன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துக் கொண்டார்.