• ஆட்டம், ஆஸ்ட்ரோவின் பிரபல உள்ளூர் தமிழ் ரியாலிட்டி நடனப் போட்டி அதன் 6 இறுதிப் போட்டியாளர்கள் அணிகளை அறிமுகப்படுத்தியது. 18 ஜனவரி 2025, பேராக், ஈப்போ, இந்திரா முலியா அரங்கத்தில் இரவு 9 மணிக்கு நேரலையாக நடைப்பெறும் மாபெரும் இறுதிச் சுற்றில் மாபெரும் வெற்றியாளர் பட்டத்தை வெல்ல இந்த திறமையானக் குழுக்கள் போட்டியிடுவர்.
• இறுதிப் போட்டியாளர்கள் அணிகளின் விபரங்கள் பின்வருமாறு:
• ரஹ்மான் நடன ஹிட்ஸ், இளையராஜா ஹிட்ஸ் மற்றும் போர் சுற்று ஆகிய மூன்று சுற்றுகள் மூலம் பல்வேறு நடனப் பணிகளுடன் போட்டியாளர்களின் பலம் மற்றும் வரம்புகளுக்குச் சவால் விடுவதை நோக்கமாக மாபெரும் இறுதிச் சுற்றுக் கொண்டுள்ளது.
• அதுமட்டுமின்றி, ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அணிகளுக்கு ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கம் வழியாக 2025 ஜனவரி 18 வரை வாக்களிக்கலாம். அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறும் அணிக்கு ஆட்டத்தின் மிகவும் பிரபலமான விருது வழங்கப்படும். அவ்வணி ரிம 5000 ரொக்கப் பணத்தை வீட்டிற்குத் தட்டிச் செல்லும்.
• ஆட்டம் வெற்றியாளர்களுக்குக் காத்திருக்கும் அற்புதமான ரொக்கப் பரிசுகள் பின்வருமாறு:
o முதலாம் பரிசு: ரிம50,000.00
o இரண்டாம் பரிசு: ரிம25,000.00
o மூன்றாம் மற்றும் நான்காம் பரிசுகள்: ஒவ்வொரு குழுக்கும் தலா ரிம5,000.00; மற்றும்
o ஐந்தாம் மற்றும் ஆறாம் பரிசுகள்: ஒவ்வொரு குழுக்கும் தலா ரிம2,000.00
• ஆட்டம் நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பை 18 ஜனவரி 2025, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள்.
• ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகள் இப்போது ரிம49.99-இலிருந்துக் கிடைக்கும். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்றப் பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99 கட்டணத்தில் பொழுதுபோக்குத் தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பவும்.
• ஆட்டம் நிகழ்ச்சியின் மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.