Home உலகம் பெனாசிர் கொலை வழக்கில் ரஹ்மான் மாலிக்கிடம் விசாரணை நடத்த போலீசார் ‘திடீர்’ முடிவு

பெனாசிர் கொலை வழக்கில் ரஹ்மான் மாலிக்கிடம் விசாரணை நடத்த போலீசார் ‘திடீர்’ முடிவு

534
0
SHARE
Ad

malikஇஸ்லாமாபாத், ஏப்ரல் 30-  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, 27-12-2007 அன்று ராவல் பிண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போது படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை தொடர்பான வழக்கில் முன்னாள் அதிபர் முஷரப் தற்போது குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பெனாசிர் கொல்லப்பட்ட போது பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக பெனாசிரின் பாதுகாப்பு அதிகாரியாகவும், பாகிஸ்தான் முன்னாள் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்த ரஹ்மான் மாலிக்கிடமும் இப்போது விசாரணை நடத்த போலீசார் திடீர் முடிவு செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

பெனாசிர் கொலை வழக்கு தொடர்பான விசாரணையை எப்.பி.ஐ. போலீசாரிடம் ஒப்படைத்தவர் ரஹ்மான் மாலிக் (படம்) தான் என்பது குறிப்பிடத்தக்கது. உள்துறை மந்திரியாக இவர் பொறுப்பு வகித்த காலத்தில் இந்த வழக்கின் விசாரணை எப்.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், மந்திரி பதவியில் இருந்த காலம் வரை ரஹ்மான் மாலிக்கிடம் விசாரணை நடத்தாத போலீசார், இப்போது புதிய முடிவெடுத்துள்ளது பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.