Home இந்தியா மீண்டும் ஆடுவேன் என்று நினைக்கவில்லை: ஸ்ரீசாந்த்

மீண்டும் ஆடுவேன் என்று நினைக்கவில்லை: ஸ்ரீசாந்த்

999
0
SHARE
Ad
2dd57e19-4356-43c1-a3c9-115af2c1bbbf_S_secvpf.gifஜெய்ப்பூர், ஜன. 30- இந்திய அணியில் முன்பு சிறந்த வேகப்பந்து வீரர்களில் ஒருவராக  இருந்தவர் ஸ்ரீசாந்த் (படம்). சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் அவர் தொடர் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனார். அதோடு பந்து வீச்சிலும் முன்னேற்றம் இல்லாததால் நீக்கப்பட்டார்.ஸ்ரீசாந்த்துக்கு கால் விரலில் மட்டும் 12 முறை எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் இரானி கோப்பைக்கான ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் ஸ்ரீசாந்த் இடம் பெற்று உள்ளார். அவர் கூறும்போது, மீண்டும் விளையாடுவேன் என்று நான் நினைக்க வில்லை.

ரஞ்சி டிராபியின் இந்த சீசனில் 150 ஓவர்கள் வரை வீசியுள்ளேன். நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன். நான் தற்போது பந்துவீச்சுக்காக ஓடி வரும் தூரத்தை குறைத்துள்ளேன் என்றார்.