Home இந்தியா இந்தியாவில் நான் சுதந்திரமாக இருக்கிறேன்: பாகிஸ்தான் மந்திரிக்கு நடிகர் ஷாருக்கான் பதிலடி

இந்தியாவில் நான் சுதந்திரமாக இருக்கிறேன்: பாகிஸ்தான் மந்திரிக்கு நடிகர் ஷாருக்கான் பதிலடி

742
0
SHARE
Ad

f949f80a-0740-4b86-bd0b-e5190bd3771e_S_secvpf.gifமும்பை, ஜன. 30-நடிகர் ஷாருக்கான் இந்திய முஸ்லிம்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு அவருக்கு எதிராக கண்டனக் குரல் எழுந்தது.

இதையடுத்து ஷாருக்கானுக்கு ஆதரவாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் கருத்து தெரிவித்தார். அதில்,” இந்தியாவில் பிறந்தவரான ஷாருக்கான் இந்தியாவிலேயே வசிக்க விரும்புகிறார். அவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு இந்திய அரசை நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

ஷாருக்கானுக்கு எதிராக பேசிவரும் இந்திய சகோதர- சகோதரிகள் அவர் ஒரு நடிகர் என்பதை உணர்ந்து அச்சுறுத்தலை திரும்ப பெற வேண்டும். ஷாருக்கான் விரும்பினால் அவர் பாகிஸ்தானில் வசிக்கலாம்” என்றார். அவரது கருத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது பற்றி மத்திய மந்திரி மணீஷ் திவாரி கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“பாகிஸ்தான் மந்திரி அவரது நாட்டின் உள் விவகாரங்கள் பற்றியும், அந்நாட்டில் சிறுபான் மையினர் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்தும் விசாரணை நடத்துவது தான் நல்லது. இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டப்படி இயங்கும் அரசு ஒவ்வொரு குடி மகனையும் ஒரேவிதமான மரியாதையுடனும், சமத்துவத்துடனும் நடத்துகிறது.

இதற்கிடையே பாகிஸ்தான் மந்திரிக்கு நடிகர் ஷாருக்கான் கண்டனம் தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஷாருக்கான் பேசியதாவது:-

நான் ஒரு நடிகராக இருப்பதால் தான் இது போன்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டி உள்ளது. நான் முஸ்லிமாக இருந்தாலும், இந்தியன் என்பதில் பெருமைப்படுகிறேன். இந்தியாவில் நான் சுதந்திரமாக இருக்கிறேன். இதே போல் முஸ்லிம்களும் மகிழ்ச்சியுமாகவும், நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறார்கள். எனவே பாகிஸ்தான் மந்திரி இது போன்ற விஷமத்தனமான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் முஸ்லிம்கள் பற்றி குறிப்பிட்டதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.