Home உலகம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 240,000 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 240,000 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டம்

619
0
SHARE
Ad
imagesவாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களுக்கு கிரீன் கார்ட் எனப்படும் பச்சை அட்டை அனுமதி வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் 2,40,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்தது.
பக்கத்து நாடான மெக்சிகோ நாட்டில் இருந்து மட்டும் 60 லட்சத்திற்கு மேற்பட்டோர் அங்கு சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படுவது குறித்து பேசப்பட்டு வருகிறது.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாராளுமன்ற பிரதிநிதிகளால் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டவிரோதமாக அமெரிக்காவில் வாழ்ந்து வரும் 1 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து பெரிய ஒப்பந்தத்திற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் மிகவும் திறமையான ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு கிரீன் கார்டு வழங்குவது சம்பந்தமான விஷயத்தில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.