Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசிய இந்திய வர்த்தக சந்தை

மலேசிய இந்திய வர்த்தக சந்தை

731
0
SHARE
Ad

najibகிள்ளான், மே 1- எதிர்வரும் 3ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 11 மணி வரை பாடாங் செட்டி கிள்ளானில் (லிட்டில் இந்தியா, கிள்ளான் அருகே)  மலேசிய இந்திய வர்த்தக சந்தை நடைபெறவுள்ளது.

இவ்வர்த்தக சந்தையை, மலேசிய இந்தியர் வர்த்தக தொழிலியல் சம்மேளனம் மற்றும் தெக்குன் நேஷனல் இணைந்து வழங்குகின்றன.

மேலும் இவ்விழாவில் மலேசிய வானொலி தொலைக்காட்சி புகழ் இந்திய கலைஞர்களின் ஆடல், பாடல் மற்றும் நகைச்சுவை படைப்புகள் அரங்கேறவுள்ளன. பல கண்கவர் பரிசுகளும் அதிர்ஷ்ட குலுக்கலும் இந்நிகழ்வில் இடம்பெறவுள்ளன.

#TamilSchoolmychoice

இந்நிகழ்வில் பராமரிப்பு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பும் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.