Home வாழ் நலம் அகத்திக்கீரையின் அருமை

அகத்திக்கீரையின் அருமை

773
0
SHARE
Ad

agathiகோலாலம்பூர், மே 3- தாவரங்களில் கீரை வகைகள் மிகவும் சத்து மிக்கவை என்பது நாம் அறிந்ததே.

அதிலும் அகத்திக்கீரை அதிக சத்துக்களையும், வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. சுவையான இக்கீரை, நம் நாடெங்கும் பயிரிடப்படுகிறது. அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும்.

இது செஸ்பேனியா (Sesbania) என்ற இனத்தைச் சேர்ந்தது. இதன் தாவரவியல் பெயர் செஸ்பேனியா கிராண்டிஃவுளோரா (Sesbania grandiflora) என்பதாகும். நமது அகத்தின் தீயை அகற்றுவதால் இது அகத்தி என்ற பெயர் பெற்றது.

#TamilSchoolmychoice

வெற்றிலைக் கொடிக்காலில் பற்றுத் தாவரமாகவும் இக்கீரையைப் பயிரிடுகிறார்கள்.  இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகை செடியாகும். அகத்தியில் பல்வேறு வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப் பூக்கள் கொண்டது.

*இலைகள் இரட்டைச் சிறகமைப்புக் கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி என்றும், சிவப்புப் பூக்களைக் கொண்டது செவ்வகத்தி என்றும் அழைக்கப்படுகின்றன.

அகத்தியின் மருத்துவப் பயன்கள் 

அகம்+தீ+கீரை என்றால் பித்தம் போக்க கூடியது. இதில் வைட்டமீன்கள், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உயிர் சத்து, தாது பொருட்கள் அதிகமாக உள்ளது.

அகத்திப் பூவை சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். அகத்தி இலைச் சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும். இலைச்சாறை மூக்கில் உறிஞ்சினால் தலைநீர் இறங்கும்.

அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி சாறோடு அதே அளவு தேன் கலந்து அருந்தினால் வயிற்று வலி நீங்கும். இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவந்தால் புண்கள் ஆறும்.

அகத்திக்கீரைப் பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவந்தால் நாள்பட்ட வயிற்று வலி மாறும். அகத்திக்கீரை பால் சுரப்பைக் கூட்டும். இக்கீரையை உணவில் சேர்த்துவந்தால் மலச்சிக்கல் தீரும். அகத்திப் பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசினால், தலைவலி மாறும்.

அகத்திப் பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, அதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் இருமல், சளி தீரும். அகத்திக்கீரை பித்தநோயை நீக்கக்கூடியது என்பதோடு, உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது.