Home கலை உலகம் மலையாள நடிகருக்கு ஆன்ட்ரியா கண்டனம்

மலையாள நடிகருக்கு ஆன்ட்ரியா கண்டனம்

534
0
SHARE
Ad

andreaசென்னை, மே 3- நடிகை ஆன்ட்ரியாவும், நானும் காதலிக்கிறோம் என்று மலையாள நடிகர் பகத்பாசில் சமீபத்தில் அறிவித்திருந்தார். இவர் டைரக்டர் பாசிலின் மகன் ஆவார். இருவரும் அன்னயும் ரசூலும் என்ற மலையாள படத்தில் ஜோடியாக நடித்தனர்.

இதில் ஆன்ட்ரியாவுடன் நெருக்கம் ஏற்பட்டதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளோம் என்றும் பகத் பாசில் கூறினார். இதற்கு ஆன்ட்ரியா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் காதலையும் ஏற்க மறுத்து விட்டார்.

இருவரையும் இன்னொரு படத்திலும் ஜோடியாக நடிக்க வைக்க முயற்சி நடந்தது. அந்த படத்தில் இருந்தும் ஆன்ட்ரியா விலகி விட்டார்.