13 ஆவது பொதுத்தேர்தலில் பினாங்கு மாநிலத்தை மக்கள் கூட்டணியிடமிருந்து கைப்பற்றிவிட வேண்டுமென்ற நோக்கத்தோடு களமிறங்கிய அம்மாநில தேசிய முன்னணியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் பலர் மீண்டும் தோல்வியையே சந்தித்துள்ளனர்.
இந்த தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்ற டெங் சாங் யாவ், சீன வாக்காளர்கள் அதிகமுள்ள பினாங்கு மாநிலத்தை தேசிய முன்னணியால் தக்க வைத்துக்கொள்ள இயலாத காரணத்தால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியால் பினாங்கு மாநிலத்தை கைப்பற்ற முடியாமல் போனால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக டெங் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பினாங்கு மாநிலம் புக்கிட் தெங்கா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட டெங் சாங் யாவ், பிகேஆர் வேட்பாளர் ஒங் சின் வென்னிடம் 5,190 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.