Home 13வது பொதுத் தேர்தல் லிம் குவானுக்கு எதிராக போட்டி – டெங் விடுத்த இரு நிபந்தனைகள்

லிம் குவானுக்கு எதிராக போட்டி – டெங் விடுத்த இரு நிபந்தனைகள்

1059
0
SHARE
Ad

330x220x703ca0ea073601f5ff68acca4b8e0124.jpg.pagespeed.ic.pVQXTYqN9mபினாங்கு,மார்ச் 30 –  பாடாங் கோத்தா சட்டமன்றத் தொகுதியில் பினாங்கு மாநில தேசிய முன்னணியின் தலைவர் டெங் சாங் யாவுக்கு எதிராக தாம் போட்டியிட தயார் என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், கடந்த இரு தினங்களுக்கு முன் அறிவித்ததைத் தொடர்ந்து, தானும் இப்போட்டிக்கு  தயார் என்று டெங் சாங் யாவ் இன்று பதிலறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆனால் தான் விடுக்கும் இரு நிபந்தனைகளை லிம் குவான் ஏற்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் டெங் முன்வைத்துள்ளார்.

இது பற்றி டெங் சாங் யாவ் கூறுகையில், ” லிம் எனக்கு எதிராக பாடாங் கோத்தா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். அவரது சவாலை ஏற்று நானும் அவருக்கு எதிராகப் போட்டியிடத் தயார். ஆனால் நான் விடுக்கும் இரு எளிய நிபந்தனைகளை லிம் குவான் ஏற்றுக் கொள்ள வேண்டும்”

#TamilSchoolmychoice

“அதில் முதலாவதாக, நான் போட்டியிடும் தொகுதியை தேசிய முன்னணி தான் தேர்வு செய்யும், இரண்டாவது வரும் பொதுத்தேர்தலில் லிம் குவான் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் தான் போட்டியிட வேண்டும்.”

“இதை லிம் ஏற்றுக்கொள்வதாக இருந்தால், விரைவில் போட்டியிடும் தொகுதியை அறிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

டெங், தான் மூன்று முறை வெற்றி பெற்ற சட்டமன்றத் தொகுதியான பாடாங் கோத்தாவை, கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பினாங்கு மாநில ஜ.செ.க தலைவர் சௌ கான் யாவ்விடம் பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.