Home உலகம் காமன்வெல்த் மாநாட்டிற்கு எலிசபெத் மகாராணியை அழைத்து வர முடியுமா?- ஐ.தே.க சவால்

காமன்வெல்த் மாநாட்டிற்கு எலிசபெத் மகாராணியை அழைத்து வர முடியுமா?- ஐ.தே.க சவால்

560
0
SHARE
Ad

indexமார்ச் 30 – இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த்  நாடுகள் மாநாட்டிற்கு முடியுமென்றால் எலிசபெத் மகாராணியை அழைத்து வருமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளது.

எலிசபெத்  மகாராணியை இந்த மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்ய  வேண்டும்  என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மகாராணி பங்கேற்காத மாநாடு, மணப் பெண் இல்லாத திருமணத்திற்கு நிகரானது. மகாராணி பங்கேற்கத் தவறினால் ஏனைய 25 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்காமல் இருக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மாநாடு நடைபெற்றாலும் அதில் மனித உரிமை விஷயங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். நாட்டின் அபிவிருத்திக்கு இதன் மூலம் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையினால் மக்களின் பணம் விரயமாவதைத் தவிர வேறு நன்மை எதுவும் கிடையாது என ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.