Home உலகம் பிரபாகரனுக்கு உதவிகளை வழங்கியோர் பற்றிய தகவல்களை வெளியிடுவேன்!- கருணா

பிரபாகரனுக்கு உதவிகளை வழங்கியோர் பற்றிய தகவல்களை வெளியிடுவேன்!- கருணா

703
0
SHARE
Ad

indexஇலங்கை, மார்ச் 30- தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு உதவிகளை வழங்கிய நாடுகள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றிய தகவல்களை வெளியிடப் போவதாக  அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி வழங்கிய நபர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் எனக்கு மட்டுமே தெரியும். நோர்வே, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு நான் விஜயம் செய்திருக்கின்றேன்.

409 ரக ஆயுதங்கள் தொடர்பான பட்டியல் ஒன்றை பேங்காக் ஹோட்டல் ஒன்றில் வைத்து ஐயர் என்ற நபருக்கு நானே வழங்கினேன். இந்தப் பட்டியலை வழங்குமாறு பிரபாகரன் எனக்கு ஆணையிட்டார்.

#TamilSchoolmychoice

நோர்வே ஆயுத நிறுவனங்களுக்கும் நான் விஜயம் செய்திருந்தேன். கண்ணாடி மாளிகைகளிலிருந்து கற்களை எறிய வேண்டாம் என அரசு சார்பற்ற நிறுவனங்களிடம் கேட்கின்றேன்.

அரசு சார்பற்ற நிறுவனங்களும் புலிகளுக்கு உதவிகளை வழங்கியிருந்தன. துப்பாக்கி துளைக்காத  வாகனமொன்றை அரசு சார்பற்ற நிறுவனமொன்று பிரபாகரனுக்கு வழங்கியிருந்தது என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு மனித உரிமை கேள்வி எழுப்பியிருந்தது. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் நோக்கில் விநாயகமூர்த்தி முரளிதரன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.