Home கலை உலகம் ஹன்சிகாவை அதிர வைக்கும் நயன்தாரா!

ஹன்சிகாவை அதிர வைக்கும் நயன்தாரா!

691
0
SHARE
Ad

indexசென்னை, மார்ச் 30- முதல் இரண்டு படங்களில் நடித்தபோது ராசியில்லாத நடிகை என்ற பட்டியலில் இருந்து ஹன்சிகா, ஒரு கல் ஒரு கண்ணாடிக்குப் பிறகு ராசியான நடிகையாகிவிட்டார்.

அந்த நேரம் பார்த்து தமன்னா வெளியேறினார். விளைவு –  காலியாக இருந்த நம்பர்-ஒன் நாற்காலியில் ஹாயாக ஏறி அமர்ந்து கொண்டார் ஹன்சிகா.

ஆனால் நயன்தாராவுக்கு செல்லவிருந்த சில முக்கிய படங்களை குறைவான சம்பளம் பேசி தன் பக்கம் கொக்கிப்போட்டு இழுத்தார். இதனால் செம கடுப்பாகி விட்டார் நயன். சீனியர் நடிகையான தன்னிடம் இந்த புதுவரவு நடிகை மோதுவதா? எங்கிட்டேவா… என்று போட்டி கோதாவில் குதித்தார்.

#TamilSchoolmychoice

அதன்காரணமாக, இதற்கு முன்பு யாருடைய சகவாசமே ஜென்மத்துக்கும் வேண்டாமென்று நினைத்தாரோ அந்த சிம்புவுடன் நடிப்பதற்குகூட தூது விட்டார் நயன்தாரா. ஆனால் தனது வாலு, வேட்டை மன்னன் என்ற இரண்டு படங்களுக்கும் ஹன்சிகாவை புக் பண்ணி வைத்திருந்த சிம்பு, மீண்டும் நயனுடன் ஜோடி சேர்ந்தால் கிசுகிசுக்கள் மறுபடியும் புகைந்து விடும் என்று அவருக்கு பதில் தூது அனுப்பவில்லை. இருப்பினும் மனம் தளரவில்லை நயன்.

அடுத்தபடியாக ஹன்சிகாவை புக் பண்ண காத்திருக்கும இயக்குனர்களை கிளுகிளு உடையில் சந்தித்து, இப்போதும் நான் இளவட்ட நடிகைதான் என்பதை சொல்லாமல் சொல்லி சான்ஸ் கேட்கிறாராம்.

கூடவே இப்போது அவர் அஜீத், ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருவதால், ஹன்சிகாவின் ஓரிரு படங்கள் நயன்தாரா பக்கம் திரும்பும் நிலையில் உள்ளதாம். இதனால் இதுவரைக்கும், நயன்தாராவால் நம்மை நெருங்க முடியாது என்று நெஞ்சை நிமிர்ததி வந்த ஹன்சிகா இப்போது அவர் தனது படங்களை அதிரடியாக அபகரிப்பதைப் பார்த்து ஆடிப்போயிருக்கிறாராம்.