Home இந்தியா சவுதி அரேபியாவில் தொழில் செய்யும் இந்தியர்களை வெளியேற்ற திட்டமா?

சவுதி அரேபியாவில் தொழில் செய்யும் இந்தியர்களை வெளியேற்ற திட்டமா?

804
0
SHARE
Ad

imagesதிருவனந்தபுரம், மார்ச் 30-  சவுதி அரேபிய நாட்டில், புதிதாக அமலுக்கு வந்துள்ள சட்டப்படி, அங்கு சிறிய தொழில்கள் செய்து வரும் இந்தியர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், “இதுகுறித்து கவலைப்படவேண்டாம்’ என, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி தெரிவித்தார்.

உணவகம், சிறு கடைகள், சிறிய அளவிலான தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை, சவுதி அரேபியா நாட்டினர் தவிர்த்து, பிற நாட்டினர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இனிமேல், இவ்வகை சிறுதொழில்களை சொந்த நாட்டினர் மட்டுமே நடத்தவேண்டும் என்பதற்காக, “நிதாகத்’ என்ற பெயரில் புதிய சட்டத்தை, சவுதி அரேபிய அரசு கொண்டு வந்துள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று முதல், புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. புதிய சட்ட விதிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது அந்நாட்டு தொழில் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என, ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய சட்டத்தால், அந்நாட்டில் செயல்பட்டு வரும், ஏழு லட்சம் சிறு நிறுவனங்களில், 84 சதவீத நிறுவனங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இல்லையேல், அந்த நிறுவனங்களில், அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரையாவது வேலைக்கு நியமிக்கவேண்டும்.

இதனால், கேரளாவின், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை உள்ளது.இது தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கையும் சேர்த்தால், வேலையிழப்பவர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போது எழுந்துள்ள இந்த புதிய பிரச்னை குறித்து, கேரள முதல்வர், உம்மன் சாண்டி, பிரதமருக்குகடிதம் எழுதியுள்ளார்.

அதில், சவுதி அரேபியாவில், கேரளாவைச் சேர்ந்த ஆறு லட்சம் பேர் பல வேலைகளை செய்து வருகின்றனர்; அவர்களின் நலன்களை காக்க வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி கூறுகையில், “”சவுதி அரேபியாவில் எழுந்துள்ள பிரச்னை குறித்து, அந்நாட்டிற்கான இந்திய தூதர், பாகித் அலி ராவிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது. விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன்,” என்றார்.