அமெரிக்கா, மே 6- அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நேற்றிரவு திடீரென்று ஏற்பட்ட காட்டுத் தீயினால் சுமார் 120 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட காடு முற்றிலுமாக அழிந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். காட்டுப் பகுதிக்கு அருகாமையில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. அங்குள்ள பண்ணைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குதிரைகள் தீயின் வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் அலறி துடித்தன.
காற்றின் வேகம் அதிகமாயிருப்பதால், லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு வடமேற்கே உள்ள வெண்டுரா மாவட்டத்தின் அருகில் உள்ள காடுகளிலும், பள்ளத்தாக்குகளில் உள்ள மரங்களும் கொழுந்துவிட்டு எரிகின்றன.
அருகிலுள்ள இரண்டு ஊரில் உள்ள வீடுகள் தீக்கிரையாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சானல் தீவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வகுப்புகள் அனைத்தும் புகை சூழ்ந்து காணப்படுவதால் வகுப்புகள் நடைபெறவில்லை.