Home அரசியல் வலைப்பதிவாளர் பபகொமோ கைது!

வலைப்பதிவாளர் பபகொமோ கைது!

610
0
SHARE
Ad

Blogger Papagomoகோலாலம்பூர், மே 7 – அம்னோ சார்பு வலைப்பதிவாளரான  பபகொமோ, மலேசிய சீன மக்களுக்கு எதிராக இன வாதத்தை தூண்டும் படியான கருத்தை தனது இணையதளத்தில் வெளியிட்டதால் காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரைப் போல் பக்காத்தான் ஆதரவு வலைப்பதிவாளரான கிங் ஜேசனும் கைது செய்யப்பட்டுள்ளார். இது தவிர இன்னும் இரு வலைப்பதிவாளர்களை கைது செய்யப்போவதாக காவல்துறை தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த பிகேஆர் ஆதரவாளர் ஒருவர், சீனர்களின் மனம் புண்படியான கருத்தை பபகொமோ தனது வலைத்தளத்தில் தெரிவித்திருப்பதாகக் கொடுத்த புகாரைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பிரீ மலேசியா டுடேவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதுதவிர உத்துசான் மலேசியா நாளிதழ் மீதும் புகார்கள் வந்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று வெளிவந்த உத்துசான் மலேசிய நாளிதழிலின் முதல் பக்கத்தில், ‘சீனர்களுக்கு இன்னும் என்ன வேண்டும்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவது அக்கட்டுரை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.