Home அரசியல் உத்துசான் தலைப்புச் செய்தி விவகாரம்: “உத்துசான் மட்டும் தானா? சீன நாளிதழ்களும் தான்” – நஜிப்...

உத்துசான் தலைப்புச் செய்தி விவகாரம்: “உத்துசான் மட்டும் தானா? சீன நாளிதழ்களும் தான்” – நஜிப் கருத்து

511
0
SHARE
Ad

Najibகோலாலம்பூர், மே 8 – உத்துசான் மலேசியா நாளிதழ் நேற்று வெளியிட்ட  ‘ சீனர்களுக்கு இன்னும் என்ன தான் வேண்டும்’ என்ற கேள்வியோடு தொடங்கும் தலைப்பு  செய்தியை பிரதமர் நஜிப் துன் ரசாக் தற்காத்துப் பேசியிருக்கிறார்.

அதோடு “ நீங்கள் உத்துசான் நாளிதழின் செய்திக்கு கண்டனம் தெரிவிக்கிறீர்கள் ஆனால் இது போன்ற செய்திகளை தினம் வெளியிட்டு வரும் சீன நாளிதழ்களை பற்றி ஏன் கேட்கவில்லை?” என்று கேள்வியும் எழுப்பியிருக்கிறார்.

நேற்று புத்ரா உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நஜிப், “சீன மக்களின் வாக்குகளை தங்கள் பக்கம் திசை திருப்புவதன் மூலம் அரசாங்கத்தையே மாற்றிவிடலாம் என்று எண்ணி எதிர்கட்சிகள் முயற்சி செய்துள்ளன.

#TamilSchoolmychoice

நான் அவர்களை குறை சொல்லவில்லை ஆனால் கடந்த தேர்தலில் அவர்களின் ‘செப்டம்பர் 16’ நிகழ்வைப் போல் இதுவும் ஒரு தோல்வி முயற்சி தான் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதோடு பொதுத்தேர்தலில் வெளிநாட்டினர் வாக்களித்தனர் என்று நிலவும் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த நஜிப்,

“100 ஜம்போ ரக விமானங்களில் சுமார் 40,000 வெளிநாட்டினர் தேர்தலில் வாக்களிப்பதற்காக அழைத்துவரப்பட்டனர் என்று எதிர்கட்சிகள் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.

உண்மையில் இது போன்ற ஜம்போ ரக விமானங்கள் தரை இறங்குவதை யாராவது பார்த்தார்களா? அவர்கள் கூறும் பொய்கள் அனைத்தும், உண்மையில் நடப்பதற்கு சாத்தியமே இல்லை.

எதிர்கட்சிகள் எப்போதும் இரட்டை மனநிலையில் செயல்படுகின்றனர். அவர்களுக்கு வெற்றி தருவதை எல்லாம் ஆதரிக்கின்றனர்.

அதே நேரத்தில் தோல்வி தருபவற்றை குறை கூறுகின்றனர்.

நாங்கள் அது போன்ற தவறான வழிமுறைகளைக் கையாள்கிறோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று செய்தியாளர்களிடம் நஜிப் தெரிவித்துள்ளார்.