மேரிலாண்ட், மே 8- பர்மாவில் கடந்த 50 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது.
ஜனநாயகத்திற்கு போராடிய பல தலைவர்கள் கொல்லப்பட்டனர். அங்கு கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து அங்கு ஜனநாயகம் மலர்வதற்கான ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பர்மாவில் மக்கள் தொகையில் 5 சதவிகிதம் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடக்க ஆரம்பித்தன. கடந்த வருடம் முஸ்லிம்கள் மீது புத்த மதப்பிரிவினர் நடத்திய தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
தற்போது அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, நோபல் பரிசு பெற்ற புத்த மதத் மதத்தலைவர் தலாய் லாமா மெர்ரிலேண்ட் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது, பர்மாவில் மதத்தின் பெயரில் நடந்துள்ள இந்த வன்முறை, நினைத்து பார்க்க முடியாத வருத்தத்தை தருகிறது. புத்தமத்தினர் இந்த வன்முறையில் இணைத்து பேசப்படுவது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர்கள் புத்தரின் அகிம்சை வழியை கடைபிடிக்க வேண்டுகிறேன் என்று கூறினார்.
மேலும் உலக முழுமைக்கும் ஒரே மனித குலம் படைக்கும் பொறுப்பு இளைஞர்களாகிய உங்களுக்கு இருக்கிறது என்று வேண்டினார்.