புதுடெல்லி – இமாலயப் பிரதேசப் பகுதிகளில் நீண்ட காலமாக இருந்து வரும் எல்லைப் பிரச்சினையை இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென தலாய் லாமா இன்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பிரச்சினை இரண்டு தரப்பிலுமே மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
டொக்லாம் பகுதியில் இந்திய, சீனப் படைகள் 7 வாரங்களாக மோதிக் கொண்டதாகக் கூறிக் கொண்டதை குறித்து தலாய் லாமா சுட்டிக் காட்டியிருக்கிறார்.
“இந்த நூற்றாண்டு பேச்சுவார்த்தைகளின் நூற்றாண்டாக இருக்க வேண்டும். ஒரு தரப்பு வெற்றி, ஒரு தரப்பு தோல்வி என்பது பழைய எண்ணம். உங்கள் அண்டை வீட்டாரை அழிப்பது என்பது உங்களையே அழிப்பது போன்றது. எனவே பேச்சுவார்த்தையால் மட்டுமே தீர்வு காண வேண்டும்” என்று தலாய் லாமா இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இன்று தெரிவித்திருக்கிறார்.