கோலாலம்பூர்,பிப்.1- மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை தலைவராக முனைவர் எஸ்.குமரன் (படம்) நியமனம் பெற்றுள்ளார்.
9 மாதக் காலம் ஆய்வு விடுப்பில் இருந்த முனைவர் குமரன் பணிக்கு திரும்பியவுடன் மலாயாப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டான்ஶ்ரீ டாக்டர் கெளத் ஜஸ்மோன் இந்திய ஆய்வியல் துறையின் தலைவராக எஸ்.குமரனை நியமித்துள்ளார்.
வரும் 4ஆம் தேதி இப்பொறுப்பினை அவர் ஏற்கவுள்ளார். முன்பு தலைவராக இருந்த இணை பேராசிரியர் கிருஷ்ணன் மணியத்தின் பதவி காலம் ஜனவரி 30ஆம் தேதிக்குள் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைவராக பதவியேற்கவிருக்கும் முனைவர் குமரன் இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்த சமுதாய ஆர்வலர்கள், அமைப்புகள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.