Home உலகம் பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் – இன்று முடிகிறது பிரசாரம்

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் – இன்று முடிகிறது பிரசாரம்

503
0
SHARE
Ad

pakistan-electionsஇஸ்லாமாபாத், மே 9- பாகிஸ்தான் பொது தேர்தலுக்கான, அனல் பறக்கும் பிரசாரம் இன்று முடிவடைகிறது.

பாகிஸ்தானில் நாளை மறுநாள் 342 இடங்களுக்கான பாராளுமன்ற  தேர்தல் நடைபெற உள்ளது.

பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி, தேரிக் – இ – இன்சாப் உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் களத்தில் உள்ளன.

#TamilSchoolmychoice

மாஜி அதிபர் முஷாரப், “அனைத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக்’ கட்சியின் சார்பில், போட்டியிட திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இதை கண்டித்து அவரது கட்சி தேர்தலை புறக்கணித்து விட்டது.

பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் பெனசிர் புட்டோவின் மகன் பிலாவல் தேர்தல் பிரசாரம் செய்தார். ஆனால் அவரது தாயை போல பிரசாரத்தின் போது தற்கொலை படையினரால் கொல்லப்படலாம் என  உளவுத்துறை எச்சரித்ததால் அவர் பிரசாரத்தை கடந்த வாரமே முடித்து கொண்டார்.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்  தீவிர பிரசாரம் செய்துள்ளார். அவருக்கு அடுத்த பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மாஜி கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், “தேரிக்-இ-இன்சாப்’ கட்சி சார்பில் தீவிர பிரசாரம் செய்தார். ஆனால் நேற்று முன்தினம் அவர் பிரசாரத்தின் போது கீழே விழுந்ததில் தலை மற்றும் முதுகுதண்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

“ஒரு வாரத்துக்கு அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும்’ என டாக்டர்கள் தெரிவித்துள்ளதால்  படுத்தபடியே அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது:-

கடந்த, 17 ஆண்டுகளாக, அரசியலில் உள்ளேன். இதுவரை நான் என்ன செய்தாலும் சரி  இனி உங்கள் பொறுப்பை சுமக்க விரும்புகிறேன்.

பாகிஸ்தான் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டியது  நீங்கள் தான். உங்கள் தலை விதியை மாற்ற நினைக்கிறேன்.

நீதியுடனும் மனிதாபிமானத்துடனும் நீங்கள் வாழ எங்கள் கட்சிக்கு ஓட்டு போடுங்கள்.

இவ்வாறு இம்ரான் கான்  உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.