நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் ஜோகூர் மாநிலம் கேலாங் பாத்தா நாடாளுமன்ற தொகுதியில் லிம் கிட் சியாங்கிற்கு, எதிராகக் களமிறங்கிய அப்துல் கனி ஒத்மான் (படம்) 14, 762 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
அரசியல் ஆதாயத்திற்காக கனி ஒத்மானை பலி கடா ஆக்கி விட்டார்கள் என்று கவலை தெரிவித்த லிம் கிட் சியாங், அவருக்கு தகுதியான பதவியை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏனெனில் அவர் கண்ணியமான – நேர்மையான – நியாயமான மலாய் தலைவர் என்றும் லிம் கிட் சியாங் வர்ணித்துள்ளார்.
Comments