Home இந்தியா காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடு? அஸ்வனி குமார் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மன்மோகன் சிங்...

காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடு? அஸ்வனி குமார் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மன்மோகன் சிங் எதிர்ப்பா?

425
0
SHARE
Ad

manmohan-singh_350_090812123306புதுடெல்லி’, மே 10- டெல்லியில் இன்று நடைபெற இருந்த காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து, ஊழல் புகாரில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர்கள் பன்சால் மற்றும் அஸ்வனி குமார் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் நாளை கூடி ஆலோசிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் கன்சாலை பதவி நீக்கம் செய்யவும், சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரை வேறு துறைக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.

#TamilSchoolmychoice

சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மன்மோகன் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமரின் இந்த எதிர்ப்பால் கட்சியில் கருத்து வேறுபாடு நிலவுதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.