Home இந்தியா இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் -கருணாநிதி

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் -கருணாநிதி

469
0
SHARE
Ad

karunanithiமே 11- இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என தி.மு.க தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்ற கருத்தை தி.மு.க.வும், டெசோ அமைப்பும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

பல கட்சி தலைவர்களும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களும் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது எனவும், இதற்கு இந்திய அரசு முயற்சிகளை எடுக்க வேண்டுமென்றும் தொடர்ந்து கேட்டுக்கொண்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

தமிழக மக்கள் மற்றும் உலக தமிழர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்ற அறிவிப்பினை உடனடியாக வெளியிட வேண்டும்.

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையிலிருந்து மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.