Home கலை உலகம் கேரளத்துப் பெண்ணை காதலிக்கும் அட்டகத்தி தினேஷ்!

கேரளத்துப் பெண்ணை காதலிக்கும் அட்டகத்தி தினேஷ்!

672
0
SHARE
Ad

attakathi hero dineshசென்னை, மே 13 – அட்டகத்தி படத்தில் நடித்தவர் தினேஷ். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதும் அதையடுத்து உடனடியாக எந்த படத்திலும் நடிக்காமல் நிறைய கதைகளை மட்டும் கேட்டு வந்தார். அப்படி கேட்டதில் வெங்கட்பிரபுவின் உதவியாளர் சசிதரன் என்பவர் சொன்ன கதை ரொம்ப பிடித்து விட, இப்போது அதில் நடித்து வருகிறார்.

முந்தைய படத்தைப் போன்று இதுவும் காதல் கதைதானாம். ஆனால் கதைக்களமும் அவர் காதலிக்கும் பெண்ணும் ரொம்ப மாறுபட்டவர்களாம்

அதற்காக கேரளா சென்று முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.

#TamilSchoolmychoice

“வாராயோ வெண்ணிலாவே” என்று பெயரிடப்பட்டிருக்கும் அப்படத்தில் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் தினேஷ், அங்குள்ள ஒரு பெண்ணை காதலிக்கும் கதையாம்.

அதனால் ஏற்படும் பின்விளைவுகள் சுவராஸ்யமாக படமாக்கப்படடு வருகிறதாம். இப்படத்தில் முந்தைய படத்தைவிட ஆட்டம்பாட்டம் என்று படு அமர்க்களப்படுத்தி வருகிறாராம் தினேஷ்.