Home கலை உலகம் அஜீத்தின் புதிய படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியீடு

அஜீத்தின் புதிய படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியீடு

736
0
SHARE
Ad

ajithkumarசென்னை, மே 13 – பில்லா-2 படத்திற்குப் பிறகு அஜீத் நடித்துள்ள படம் வலை. விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள இந்த படத்தில் இன்னும் அதிகாரப்பூர்வமான தலைப்பு வெளியிடப்படவில்லை. அதுபற்றி அஜீத் ரசிகர்கள் தரப்பில் இருந்து கேட்டபோது, அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ந்தேதி அப்படத்திற்கான தலைப்பு வெளியாகும் என்று தெரிவித்திருந்தார் விஷ்ணுவர்தன். ஆனால் அன்றைய தினத்தில் படத்தின் டிரைலரை மட்டுமே வெளியிட்டு தலைப்பு பற்றி எந்தவித தகவலும் வெளியிடவில்லை.

இந்நிலையில், அப்படத்தை ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி வெளியிட திட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வரும் அஜீத், இன்னமும் வலை படத்திற்கான வசனங்களைப் பேச வில்லையாம். அப்படத்தின் முதல்கட்ட படப்படிப்பை முடித்து வந்தபிறகு தான் பேசுவதாக சொல்லியிருக்கிறாராம்.

அதனால், படத்தின் இதர வேலைகளில் ஈடுபட்டுள்ள விஷ்ணுவர்தன், மற்ற நடிகர்-நடிகைகளுக்கான வசனங்களை ஒலிப்பதிவு செய்யும் வேலைகளில் தற்போது தீவிரமடைந்திருக்கிறார்.