Home அரசியல் ஜோகூர் மாநில ஆட்சிக் குழுவில் இரு இந்தியர்களுக்கு வாய்ப்பு

ஜோகூர் மாநில ஆட்சிக் குழுவில் இரு இந்தியர்களுக்கு வாய்ப்பு

655
0
SHARE
Ad

State-by-State-Johorஜோகூர் பாரு, மே 13 – ஜோகூர் மாநில அரசின் புதிய ஆட்சிக் குழுவில் ம.இ.கா வைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக வழங்கப்படும் ஒரு இடத்தை விட கூடுதலாக தற்போது மேலும் ஒர் இந்தியருக்கு வாய்ப்பு வழங்கப்பட இருப்பது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே ஜோகூர் மாநில ஆட்சிக் குழுவில் இடம்பெற்றிருந்த, ஜோகூர் மாநில ம.இ.கா செயலாளரும், கம்பீர் சட்டமன்ற உறுப்பினருமான மு.அசோகன் (படம்) , 13 ஆவது பொதுத்தேர்தலில் கம்பீர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டார். எனவே அவருக்கு இம்முறையும் ஆட்சிக் குழுவில் இடம் தருவது உறுதியாகியுள்ளது.

அவரைத் தொடர்ந்து மற்றொரு இடத்தில், ஜோகூர் மாநில ம.இ.கா பொருளாளரும், கஹாங் சட்டமன்ற உறுப்பினருமான இராம. வித்யானந்தனோ அல்லது ம.இ.கா சார்பில் தெங்காரோ சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கி. ரவீன் குமாரோ நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.